Published:Updated:

ஆட்டோமொபைல் காட்டும் இண்டிகேட்டர்! - விழித்துக்கொள்ளுமா மத்திய அரசு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆட்டோமொபைல் காட்டும் இண்டிகேட்டர்!
ஆட்டோமொபைல் காட்டும் இண்டிகேட்டர்!

ஜூ.வி 2020

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பங்கு வகிக்கும் ஆட்டோ மொபைல் துறை, கடும் பாதிப்பில் இருக்கிறது. 2008-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு களில் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியை சமீப காலங்களில் சந்தித்து வருகிறது இந்தத் துறை. இந்தியாவில் சுமார் 3.7 கோடி பேர், இந்தத் துறையில் வேலை செய்கிறார்கள்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM- எஸ்.ஐ.ஏ.எம்) தரவுகள், ‘2019-20 நிதி ஆண்டின் முதல் பாதியில் (செப்டம்பர் வரை) மொத்த வாகனங்களின் விற்பனை 17.98 சதவிகிதம் சரிந் துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாசஞ்சர் கார்களின் விற்பனை 41 சதவிகிதமும், கமர்ஷியல் வாகனங் களின் விற்பனை 62.11 சதவிகிதமும் சரிந்துள்ளது. 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3,50,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 10,00,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலையில் இருக்கி றார்கள்’ என்கின்றன.

ஆட்டோமொபைல் விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை யைச் சார்ந்திருக்கும் சிறு நிறுவனங்கள் போன்றவையும் இந்த விற்பனைச் சரிவால், இக்கட்டான நிலையில் இருக்கின்றன. இந்தப் புத்தாண்டிலாவது விடிவு கிடைக்குமா என்று அந்தத் துறையினர் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ‘கண்டிப்பாகத் தீர்வு கிடைக்காது; தாமதமாகும்’ என்கிறார்கள், துறை சார்ந்த வல்லுநர்கள்.

ஆட்டோமொபைல் காட்டும் இண்டிகேட்டர்!
ஆட்டோமொபைல் காட்டும் இண்டிகேட்டர்!

‘Fitch Ratings’ (ஃபிட்ச் ரேட்டிங்ஸ்) என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகளவில் கார்களின் விற்பனை சரிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. உலகளவிலான புள்ளிவிவரப்படி 2019-ம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டைவிட 31 லட்சம் கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் இந்த மந்தநிலை நிலவி வருகிறது. ஆனால், ‘உலகளாவிய இந்த மந்தநிலை, இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்குக் காரணமில்லை’ என்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.

இந்தியாவில் உள்நாட்டு விற்பனை தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, NBFC துறை சந்திக்கும் நெருக்கடிகள் போன்றவற்றால் தொழில்துறையில் கையிருப்புப் பணத்தின் அளவு குறைந்துவிட்டது. ஆட்டோ மொபைல் துறையின் கடுமையான பாதிப்புக்கு முக்கியக் காரணம் இது. மேலும், மூன்றாம் நபர் வாகனக் காப்பீட்டுக்கான பிரீமியம், சாலை வரி போன்றவையும் உயர்ந்திருப்பதால், (தற்போது சாலை வரி உயர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது) வாகனங்களின் ஆன்ரோடு விலை அதிகரித்துவிட்டது.

ஆட்டோமொபைல் காட்டும் இண்டிகேட்டர்! - விழித்துக்கொள்ளுமா மத்திய அரசு?

கார்களின் பாதுகாப்பு விதிமுறைகள், பாதசாரிகள் பாதுகாப்பு விதிமுறைகள், BS-6 மாசு கட்டுப்பாடு, ஆக்ஸில் எடை நெறிமுறை, CAFE திருத்தம் போன்றவற்றை ஒரே நேரத்தில் கொண்டுவந்ததால், ஆட்டோ மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்த விதிமுறைகள், மக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதே நேரத்தில் கால் டாக்ஸி சேவைகள், மெட்ரோ ரயில் போக்குவரத்து போன்றவையும் கார் வாங்கும் எண்ணத்திலிருந்த பலரின் மனநிலையை மாற்றியிருக்கின்றன. அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு வாகனம் வாங்குவதுகூடத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்கிறார்கள். இத்தகைய விஷயங்கள்தான் ஆட்டோமொபைல் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. வாகன விற்பனை சரிந்து, வாகனங்கள் தேங்க ஆரம்பித்ததால், டி.வி.எஸ், அசோக் லேலண்டு, மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொழிற்சாலையில் வேலையை நிறுத்தி, உற்பத்தியைக் குறைத்துவிட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டொயோட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ராஜா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொடுத்த பேட்டி ஒன்றில், “வாகனங்களின் விற்பனை, தற்போது 18-19 சதவிகித அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் நான்கு சதவிகித அளவு விற்பனை அதிகரிக்கும். தொடர்ந்து படிப்படியாகத்தான் விற்பனை அதிகரிக்கும்” என்றார். எஸ்.ஐ.ஏ.எம்-மின் தற்போதைய தரவின்படி விற்பனை வீழ்ச்சி 16 சதவிகித அளவில் இருக்கிறது.

டெய்ம்லர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சத்யகம் ஆர்யா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், “தற்போது கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை, 24 சதவிகிதம் குறைந்துள்ளது. 2020-ம் ஆண்டிலும் இதே நிலைதான் நீடிக்கும். 2021-ம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக விற்பனை அதிகரிக்கும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

ஆட்டோமொபைல் காட்டும் இண்டிகேட்டர்!
ஆட்டோமொபைல் காட்டும் இண்டிகேட்டர்!
ஏற்கெனவே வரி வருவாய் குறைந்திருக்கும் நிலையில், நேரடி வரியான கார்ப்பரேட் வரியையும் குறைத்திருக்கிறது, மத்திய அரசு.

ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலைகுறித்து, பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். “கடந்த ஆறு ஆண்டுகளாக வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. பொருளாதார வளர்ச்சி என்பது, ஏற்றுமதி - இறக்குமதி, தனியார் முதலீடு, அரசு முதலீட்டு, முதலீட்டுச் செலவுகள், நுகர்வோர் செலவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். இவற்றில் ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் தனியார் முதலீடு ஆகியவை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகின்றன. வங்கி சேமிப்பும் குறைந்துவிட்டது. பண மதிப்பிழப்பு மற்றும் வராக்கடன் ஆகியவற்றால், வங்கிகளின் மீதான நம்பிக்கையும் குறைந்துவிட்டது. பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது மின்சாரத் தேவை அதிகரிக்கும். இந்தியாவில் இதுவரை மின்சாரத் தேவையும், உற்பத்தியும் அதிகரித்திருக்கிறதே தவிரக் குறைந்ததில்லை. ஆனால், தற்போது அபூர்வமாக அதுவும்கூட குறைந்துள்ளது.

டிராக்டர் மற்றும் கமர்ஷியல் வாகன விற்பனை குறைந்திருப்பது, நாட்டில் உற்பத்தி குறைந்திருப்பதை எதிரொலிக்கிறது. ஏற்கெனவே வரி வருவாய் குறைந்திருக்கும் நிலையில், நேரடி வரியான கார்ப்பரேட் வரியையும் குறைத்திருக்கிறது, மத்திய அரசு. உற்பத்தி குறைந்திருப்பதால், பணப்புழக்கம் குறைந்துள்ளது. வேலை இழப்புகள் அதிகரித்துள்ளதால், தனி மனிதர்களின் வருமானம் குறைந்துள்ளது. இதனால், தனி மனிதரின் செலவு செய்யும் திறன் குறைந்துள்ளது. குறிப்பாக இந்த நிலை, கிராமங்களில் படுமோசமாக உள்ளது. இப்படி, ஒரு துறை இன்னொரு துறையின் வளர்ச்சியைப் பாதிப்பதால்... ‘கோர் செக்டார்கள்’ எனப்படும் இரும்பு, மின்சாரம், சுத்திகரிப்பு, இயற்கை வாயு, குருட் ஆயில், உரம், நிலக்கரி, சிமென்ட் ஆகிய எட்டுத் துறைகளும் கடும் பாதிப்படைந் துள்ளன. எனவே, 2020-ம் ஆண்டிலும் பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் போக வாய்ப்பு இல்லை. இதை பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை; மாறாக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் என்பதற்காக வேறு வழியே இல்லாமல் சொல்ல வேண்டியுள்ளது” என்றார்.

2008-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்தபோது... வங்கிகளின் சேமிப்பு, சிறு, குறு தொழில்கள், முறைசாரா தொழில்கள் போன்றவற்றால் இந்தியா பொருளாதாரச் சரிவிலிருந்து இரண்டே ஆண்டுகளில் மீண்டது. ஆனால், இப்போது அதே நிலையைக் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக் கிறது என்பதற்கு ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலைதான் இண்டிகேட்டர். இதை உணர்ந்து செயல்பட வேண்டியது, ஆள்பவர்களின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு