Published:Updated:

ஒன் பை டூ

ராம. ஸ்ரீனிவாசன், சபாபதி மோகன்
பிரீமியம் ஸ்டோரி
ராம. ஸ்ரீனிவாசன், சபாபதி மோகன்

`சனாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்பு சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது’ என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது...

ஒன் பை டூ

`சனாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்பு சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது’ என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது...

Published:Updated:
ராம. ஸ்ரீனிவாசன், சபாபதி மோகன்
பிரீமியம் ஸ்டோரி
ராம. ஸ்ரீனிவாசன், சபாபதி மோகன்

பேராசிரியர் ராம. ஸ்ரீனிவாசன், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர்

``முழுக்க முழுக்க சரி. சனாதன தர்மத்தால் இந்தியா கட்டமைக்கப்படவில்லையென்றால் வேறு எதனால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது... சாதியக் கட்டமைப்புக்கும், சனாதன தர்மத்துக்கும் சம்பந்தமே இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சாதிக் கட்டமைப்புக்கும், வர்ணாஸ்ரமத்துக்கும்தான் இடமில்லை; சனாதனத்துக்கு இடம் இருக்கிறது; வேண்டுமென்றால் அவர்களை நாடாளுமன்ற நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரிஜினல் காப்பியைப் போய்ப் பார்க்கச் சொல்லுங்கள். அதில் குருஷேத்ர யுத்தமும், ராமாயணச் சித்திரங்களும்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பிறகு அது என்ன தர்மம்... இதற்கு முன்பு இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர் நேரு சனாதனம் குறித்து எழுதியிருக்கிறார், ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் சனாதனத்தின் மறு வடிவமாகவே இருந்திருக்கிறார், அப்துல் கலாம் பாராட்டியிருக்கிறார். இவ்வளவு ஏன்... நாம் தேசத்தந்தையாகப் போற்றும் காந்தியடிகளே `நான் ஒரு சனாதன இந்து’ எனப் பெருமையாக, பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஆளுநர் என்ன சொன்னாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கக்கூடியவர்கள், இதிலும் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். ஏற்கெனவே இவர்களுள் ஊறியிருக்கும் இந்து மத வெறுப்புதான் இதில் வெளிப்படுகிறது. அவரை விமர்சிக்க, யாருக்கும் எந்த உரிமையும், தகுதியும் கிடையாது!’’

ராம. ஸ்ரீனிவாசன்
ராம. ஸ்ரீனிவாசன்
சபாபதி மோகன்
சபாபதி மோகன்

முனைவர் சபாபதி மோகன், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர்

``எவ்வளவு பெரிய தவறான கூற்று! சனாதனம் என்பது வர்ணாஸ்ரமத்தோடும் மனுதர்மத்தோடும் தொடர்புடையது என்பதையும், இது இந்து மதத்தில் இருக்கிறது என்பதையும் வலதுசாரிகளே ஒப்புக்கொள்கிறார்கள். இந்த சனாதன மனுதர்மம்தானே தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என மனிதனை பிறப்பால் பிரிக்கிறது... மேல்சாதி - கீழ்சாதி என்ற ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கிறது... பெண்களைப் படிக்கக் கூடாது என்கிறது... அப்படியிருக்கும்போது ஆளுநர் எந்தப் பொருளில் இப்படிப் பேசினார்... ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளத்தின் பிரசாரச் செயலாளர்போல பேசிக்கொண்டிருக்கிறார். நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் `மதச்சார்பின்மை’யைத்தான் போதிக்கிறது. இந்தியாவில் எல்லா மதங்களும், இனங்களும், மொழிகளும் இருக்கும்போது, இந்து மதத்தில் உள்ள சனாதன தர்மத்தின் ஒளியால்தான் இந்த நாடு உருவானது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... முதலில் இதை `தர்மம்’ என்று சொல்வதையே ஏற்க முடியாது; இது `சனாதன அதர்மம்’தான். பா.ஜ.க-வைத் தவிர தமிழ்நாட்டில் மற்ற எந்தக் கட்சியும் சனாதனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆளுநர் சட்டத்தில் இருப்பதைப் பேசலாம். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக, மதச்சார்பின்மை கொள்கைக்கு மாறாக, தமிழ்நாட்டு மக்களின் பொதுக் கருத்துக்கு எதிராக இப்படி பேசக் கூடாது. அவர் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism