Published:Updated:

ஒன் பை டூ: இஃப்தார் விருந்து, அரசியல் மேடையாகிறதா?

ஜவஹர் அலி,  முகமது முனீர்
பிரீமியம் ஸ்டோரி
ஜவஹர் அலி, முகமது முனீர்

ஜெயலலிதாவுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் அக்கட்சி கூட்டணி அமைத்ததால்தான் தற்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம்.

ஒன் பை டூ: இஃப்தார் விருந்து, அரசியல் மேடையாகிறதா?

ஜெயலலிதாவுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் அக்கட்சி கூட்டணி அமைத்ததால்தான் தற்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம்.

Published:Updated:
ஜவஹர் அலி,  முகமது முனீர்
பிரீமியம் ஸ்டோரி
ஜவஹர் அலி, முகமது முனீர்

ஜவஹர் அலி, மாநிலச் சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க.

“தி.மு.க-தான் இஃப்தார் விருந்தைவைத்து முஸ்லிம்களிடம் அரசியல் செய்கிறது. இத்தனை ஆண்டுக்காலமாக ஏதோ ஓர் அமைப்பு நடத்தும் இஃப்தார் விருந்தில்தான் ஸ்டாலின் கலந்துகொள்வார். தற்போது ஆட்சியில் இருப்பதாலும், முஸ்லிம் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், முதன்முறையாக தி.மு.க சார்பிலேயே இஃப்தார் விருந்து நடத்தியுள்ளனர். இதுவே ஓர் அரசியல்தான். இதிலும்கூட, கட்சியிலிருந்து ஒரு பைசா கொடுக்கவில்லை, கட்சியிலுள்ள சிறுபான்மைப் பிரிவினர்தான் காசு செலவழித்துள்ளனர். ஆனால், 2001-ம் ஆண்டு முதலே அ.தி.மு.க நடத்திவரும் இஃப்தார் விருந்துகள் முழுமையாகக் கட்சிச் செலவில்தான் நடந்துவருகின்றன. இது தவிர, தனிப்பட்ட வகையில் ஜெயலலிதா தனது சொந்தக் காசிலும் நடத்தியிருக்கிறார். ‘சிறுபான்மைச் சமூகத்துக்கு நாங்கள்தான் பாதுகாவலர்’ என்று ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் சொல்வாரே தவிர, முஸ்லிம்களுக்காக தி.மு.க-வால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து ஒரு முறையாவது பேசியிருக்கிறாரா... பேசவும் முடியாது. காரணம் இட ஒதுக்கீடு ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம் அமைத்தது, நோன்புக் கஞ்சி காய்ச்ச அரிசி மூட்டைகளை வழங்கியது என அ.தி.மு.க-தான் எண்ணிலடங்கா திட்டங்களை இஸ்லாமியர்களுக்குக் கொடுத்திருக்கிறது. எனினும், பா.ஜ.க என்கிற மாயையைக் காட்டி, முஸ்லிம்களை வாக்குவங்கியாக மட்டுமே நிலைநிறுத்தி வைத்திருக்கிறது தி.மு.க.”

ஜவஹர் அலி
ஜவஹர் அலி
முகமது முனீர்
முகமது முனீர்

முகமது முனீர், துணைத் தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

“அ.தி.மு.க-தான் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிகளை அரசியலாக்கிவருகிறது. நாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்து, ஜெயலலிதா நடத்திய அனைத்து இஃப்தாரிலும் பங்கேற்றிருக்கிறோம். ஜெயலலிதாவுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் அக்கட்சி கூட்டணி அமைத்ததால்தான் தற்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். கவுன்சிலர் முதல் எம்.பி வரை பதவிகள், சிறைவாசி விடுதலைக்கு ஆணையம், சி.ஏ.ஏ போராட்ட வழக்குகள் வாபஸ் என ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள், நாங்கள் கேட்காததையும் செய்துகொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இதைவைத்து ஒருபோதும் அவர் அரசியல் செய்வதில்லை. சிறுபான்மையினரை மொத்தமாக வெறுக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வுடன் கூட்டணியும் வைத்துக்கொள்வது, மறுபக்கம் இஃப்தார் விருந்தும் நடத்துவது, அதில் முஸ்லிம்களுக்கு இதெல்லாம் செய்திருக்கிறோம் என்று எடப்பாடி சொல்வதுமாக அ.தி.மு.க-தான் இஃப்தாரை அரசியலாக்கிவிட்டது. பா.ஜ.க-வுடன் தி.மு.க இணைந்தால், தி.மு.க-வைப் புறக்கணிக்கவும், பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறினால், அ.தி.மு.க-வை ஆதரிக்கவும் இஸ்லாமியர்கள் தயங்கமாட்டார்கள்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism