Published:Updated:

ஒன் பை டூ: கேந்திர வித்யாலயா பள்ளிகளில், எம்.பி-க்களின் பரிந்துரை ரத்துசெய்யப்பட்டிருப்பது?

ரவிக்குமார், நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
ரவிக்குமார், நாராயணன் திருப்பதி

மிகச்சரியான நடவடிக்கை. காங்கிரஸ் அரசாங்கத்தில், கபில் சிபல் மத்திய அமைச்சராக இருந்தபோதுகூட இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஒன் பை டூ: கேந்திர வித்யாலயா பள்ளிகளில், எம்.பி-க்களின் பரிந்துரை ரத்துசெய்யப்பட்டிருப்பது?

மிகச்சரியான நடவடிக்கை. காங்கிரஸ் அரசாங்கத்தில், கபில் சிபல் மத்திய அமைச்சராக இருந்தபோதுகூட இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

Published:Updated:
ரவிக்குமார், நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
ரவிக்குமார், நாராயணன் திருப்பதி

ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர், வி.சி.க

``மிகப்பெரிய அநீதி. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்கெனவே பத்து இடங்கள் கொடுக்கப்பட்டுவந்தன. ‘அது போதாது, ஒரு எம்.பி தொகுதியில், ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதனால், குறைந்தது 50 இடங்களாவது உயர்த்தப்பட வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் சார்பாக மணீஷ் திவாரி நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், இப்போது ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏழை எளிய குழந்தைகள் படிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இந்த நடைமுறை இருந்துவந்தது. அதைத் தடுத்துவிட்டார்கள். ஒன்றியக் கல்வி அமைச்சர் பல்லாயிரக்கணக்கான இடங்கள் வரை சிபாரிசு செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, பலருக்கு கோட்டாக்கள், முன்னுரிமைகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு எம்.பி-க்களின் கோட்டாவை ரத்துசெய்யவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது... எம்.பி-க்களின் உரிமைகளைப் பறித்துவருவதன் ஒரு பகுதிதான் இது. ஒன்றிய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். கே.வி பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பரிந்துரை இருக்க வேண்டும். அதேபோல, இடங்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு பள்ளியாவது அமைக்க வேண்டும்.’’

ஒன் பை டூ: கேந்திர வித்யாலயா பள்ளிகளில், எம்.பி-க்களின் பரிந்துரை ரத்துசெய்யப்பட்டிருப்பது?
ஒன் பை டூ: கேந்திர வித்யாலயா பள்ளிகளில், எம்.பி-க்களின் பரிந்துரை ரத்துசெய்யப்பட்டிருப்பது?

நாராயணன் திருப்பதி, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க

``மிகச்சரியான நடவடிக்கை. காங்கிரஸ் அரசாங்கத்தில், கபில் சிபல் மத்திய அமைச்சராக இருந்தபோதுகூட இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. பரிந்துரைகளின் அடிப்படையில் இடங்கள் வழங்குவதால், தேவைப்படும் பயனாளிகளுக்கு இடங்கள் கிடைப்பதில்லை என்கிற பிரச்னை கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்தது. அடிப்படையில், கேந்திரிய வித்யாலயா என்பதே, மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அதிகமாகப் பணிமாற்றம் செய்யப்படுபவர்களின் குழந்தைகள் படிப்பதற்காகத் தொடங்கப்பட்டதுதான். அதாவது, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு ஒரு மத்திய அரசு அலுவலர் இடமாற்றம் செய்யப்படும்போது, அவர்கள் குழந்தைகள் ஒரே சீரான பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே இது. ஆனால், பரிந்துரைகளால் அதிக அளவில் இங்குள்ள மாணவர்களைச் சேர்க்கும்போது, அது உருவாக்கப்பட்டதற்கான அடிப்படையே பாதிக்கப்படுகிறது. அதேபோல, ஏழை, எளிய மாணவர்களும் இதனால்தான் பயன்பெறவில்லை. அதனால்தான் பரிந்துரைகள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. இதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அமைச்சருக்கு ஆயிரக்கணக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என்பதும் தவறான தகவல். அதனால், இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism