Published:Updated:

ஒன் பை டூ: “என் மரத்துக்குக் கீழே வளரும் குட்டைச் செடி பா.ஜ.க!” என்று சீமான் சொல்வது...

ராம ஸ்ரீநிவாசன், இடும்பாவனம் கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ராம ஸ்ரீநிவாசன், இடும்பாவனம் கார்த்தி

உண்மையான கருத்து. நாம் தமிழர் கட்சி, முப்பாட்டன் முருகன் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்தது.

ஒன் பை டூ: “என் மரத்துக்குக் கீழே வளரும் குட்டைச் செடி பா.ஜ.க!” என்று சீமான் சொல்வது...

உண்மையான கருத்து. நாம் தமிழர் கட்சி, முப்பாட்டன் முருகன் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்தது.

Published:Updated:
ராம ஸ்ரீநிவாசன், இடும்பாவனம் கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
ராம ஸ்ரீநிவாசன், இடும்பாவனம் கார்த்தி

ராம ஸ்ரீநிவாசன், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க

“நிதானம் இல்லாத பேச்சு. சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டது. மொத்தமாகத் தமிழ்நாடு முழுவதும் 308 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறோம். ஆனால், அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வென்றது. இவர்கள் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது. தமிழ்நாட்டில் பா.ஜ.க பல சட்டமன்ற தேர்தலைத் தனித்துச் சந்தித்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவிகிதத்தையும் பெற்றிருக்கிறோம். உண்மை நிலவரம் தெரியாமல், வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டிருக்கிறார் சீமான். தமிழ்நாட்டில் பா.ஜ.க தவிர்க்க முடியாத தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துவருகிறது. இந்த வளர்ச்சியைக் கண்டு பயந்துதான் நாம் தமிழர் கட்சி உட்பட தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் பா.ஜ.க-வைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. இவர்களின் விமர்சனம் பா.ஜ.க-வின் வளர்ச்சியை எந்த வகையிலும் தடுக்கப்போவதில்லை. சீமானின் மீசையின் அளவுக்குக் கூட அவரின் கட்சியின் அளவு கிடையாது. தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சியைப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து அந்தக் கட்சி நீர்த்துப்போகும்!”

ராம ஸ்ரீநிவாசன்,
ராம ஸ்ரீநிவாசன்,
 இடும்பாவனம் கார்த்தி
இடும்பாவனம் கார்த்தி

இடும்பாவனம் கார்த்தி, இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நா.த.க

“உண்மையான கருத்து. நாம் தமிழர் கட்சி, முப்பாட்டன் முருகன் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்தது. அதற்கு மக்களிடம் இருந்த வரவேற்பைப் பார்த்த தமிழ்நாட்டு பா.ஜ.க-வினர் முருகனையும், வேலையும் கையிலெடுத்தனர். தமிழ்நாடும், தமிழ் மக்களும் பா.ஜ.க-வை என்றைக்குமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடியின் தாடி அளவுக்குக்கூடத் தமிழ்நாட்டில் பா.ஜ.க வளரவில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது அவர்களின் உண்மையான கட்சிக் கொள்கைகளான, ராம ராஜ்யம், அகண்ட பாரதம், இந்து ராஜ்ஜியம், சாவர்க்கர் குறித்தெல்லாம் பேசி வாக்கு கேட்டதுண்டா... பிரதமர் மோடியின் பெருமை குறித்துப் பேசி வாக்கு கேட்டார்களா... கிடையாது. தேர்தலில் அவர்களின் அதிகாரத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தியே வெற்றிபெற்றனர். இதுவரை போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களையுமே மிக நேர்மையாகச் சந்தித்திருக்கிற கட்சி எங்கள் கட்சி. அ.தி.மு.க-வின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களின் தோளில் ஏறிப் பயணித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கலாம். இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி நடக்கலாம். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு ‘லெட்டர் பேடு’ கட்சிக்கு என்ன மரியாதையோ... அதைவிடக் குறைவான மரியாதைதான் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism