Published:Updated:

``வெறும் 5 சாட்சியங்கள்தானா?'' - 2020 டெல்லி கலவர வழக்கில் போலீஸாரை விளாசிய நீதிமன்றம்!

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில், ``மோசமான, இரக்கமற்ற, மந்தமான விசாரணையை டெல்லி போலீஸார் கையாண்டிருக்கின்றனர்'' என்று கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்திருக்கிறது டெல்லி கர்கர்டூமா நீதிமன்றம்.

பா.ஜ.க அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென இஸ்லாமியர்கள் பலரும் 2019, டிசம்பர் மாதம் முதலே போராட்டம் நடத்திவந்தனர். இந்தப் போராட்டம், 100 நாள்களைக் கடந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவந்தது. இந்தப் போராட்டத்தில் பிப்ரவரி 23-ம் தேதியன்று கலவரம் வெடித்தது. இந்துத்துவவாதிகள் போராட்டக் களத்துக்குள் புகுந்து கற்களை வீசியதாகவும், அதற்கு இஸ்லாமியர்கள் பதில் தாக்குதல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தக் கலவரத்தில் சுமார் 53 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. உயிரிழந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் இஸ்லாமியர்கள் என்கிற தகவல்களும் சொல்லப்பட்டன. மசூதிகள், இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் ஆகியவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால், இஸ்லாமியர்கள் பலரும் இருக்க இடமின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்: 2 சேனல்களுக்கு 48 மணி நேர தடை விதிப்பு... உடனடியாக நீக்கப்பட்டது ஏன்?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி காவல்துறை, இந்தக் கலவரம் தொடர்பாக 751 எஃப்.ஐ.ஆர்களைப் (முதல் தகவல் அறிக்கைகளைப்) பதிவு செய்தது. டெல்லி கலவரம் தொடர்பான பல்வேறு வழக்குகளும் டெல்லியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றன. அவற்றில் ஒரு வழக்கு, டெல்லி கர்கர்டூமா மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (செப். 2) விசாரணைக்கு வந்தது.

ஷா அலாம், ரஷித் சைஃபி, ஷதாப் (Shah Alam, Rashid Saifi, and Shadab) ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவிட்டு கைதுசெய்திருந்தது டெல்லி காவல்துறை. இவர்கள் மூவரும், டெல்லி சந்த் பாக் பகுதியிலுள்ள கடைகளை நாசம் செய்ததாகவும், கடை ஒன்றில் கொள்ளையடித்ததாகவும் அந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது டெல்லி காவல்துறை.

நீதிமன்றம்
நீதிமன்றம்
Pixabay

இந்த வழக்கை நேற்று விசாரித்த கர்கர்டூமா நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ், டெல்லி போலீஸாரைக் கடுமையாக விமர்சித்து, இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவர்களை விடுவித்திருக்கிறார். ``நீண்ட நாள்களாக இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, வெறும் ஐந்து சாட்சிகளை மட்டுமே இந்த வழக்கில் ஆஜர்படுத்தியிருக்கிறது. அந்தச் சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடைகளைச் சூறையாடியதாகத் தெரிகிறது. ஆனால், மூன்று பேரை மட்டுமே காவல்துறை கைதுசெய்திருக்கிறது'' என்றிருக்கிறார் நீதிபதி வினோத்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ``இந்தியா பிரிக்கப்பட்ட பிறகு டெல்லியில் நடந்த மிக மோசமான கலவரத்தில், சரியான விசாரணையை நடத்தத் தவறியிருக்கிறது காவல்துறை. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வைத்து இந்த வழக்கில் விசாரணை செய்யப்படவில்லை. முறையான விசாரணையும் நடத்தப்படவில்லை. தகுந்த சாட்சியங்களும் இல்லை. வெறும் குற்றப் பத்திரிகைகள் மூலம் மட்டுமே இந்த வழக்கை முடித்திருக்கிறார்கள்'' என்று காவல்துறையின் விசாரணையைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் நீதிபதி.
இந்த வழக்கின் மூலம் வரி செலுத்துவோரின் கடின உழைப்பில் ஈட்டப்பட்ட பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதி வினோத் யாதவ்

``இந்தச் சம்பவம் நடந்தபோது, குற்றம்சுமத்தப்பட்டிருப்பவர்கள் அந்த இடத்தில்தான் இருந்தார்கள் என்பதற்கான சிசிடிவி ஆதாரங்கள் எதுவும் இல்லை. தனிப்பட்ட சாட்சியங்கள் யாருமில்லை. இந்த கிரிமினல் குற்றம் தொடர்பான தகுந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. காவல்துறை சமர்ப்பித்த ஆதாரங்களும், குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டன. அதனால், குற்றம்சுமத்தப்பட்ட மூவரும் இந்த வழக்கிலிருந்து விடுக்கப்படுகிறார்கள்'' என்று சொல்லி இந்த வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி வினோத் யாதவ்.

சுதந்திர இந்தியா 75... தேசம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய 22 அரசியல் நிகழ்வுகள்!
அடுத்த கட்டுரைக்கு