Published:Updated:

பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?! - அண்ணாமலையின் மூவ்... பரபரக்கும் கமலாலயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அண்ணாமலையின் மூவ்... பரபரக்கும் கமலாலயம்!
அண்ணாமலையின் மூவ்... பரபரக்கும் கமலாலயம்!

'அமைப்புரீதியாக பா.ஜ.க-வில் மாற்றம் ஏற்படவிருக்கிறது' என்கிற செய்தியால் பரபரப்பில் இருக்கிறது கமலாலயம். சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தத் தேர்தல்களில் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், நவம்பர் 7-ம் தேதி முதல், 15-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வை நம்பியிருக்காமல், தனித்தே களமிறங்கவும் தீர்மானித்திருக்கிறதாம் கமலாலயம். இந்தச் சூழலில், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மாற்றப்படவிருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. இது குறித்து, பா.ஜ.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

"தி.மு.க-வுக்கு மாற்றான, பிரதான எதிர்க்கட்சியாக களத்தில் வேகம்காட்ட முடிவெடுத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால், தலைமையின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதுபோல, மாவட்ட அளவில் நிர்வாகிகள் வேகம் காட்டுவதில்லை. இல.கணேசன் காலம்தொட்டு இருப்பவர்கள்தான் இன்றும் மாவட்ட அளவில் கோலோச்சுகிறார்கள். அவர்களையெல்லாம் எடுத்துவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட தீர்மானித்திருக்கிறார் அண்ணாமலை. இதன்படி, சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் மாற்றப்படவிருக்கின்றனர்.

அமைதியோ... அமைதி! - பா.ஜ.க - ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன?

தி.மு.க-வை எதிர்த்து களத்தில் சித்தாந்தரீதியாகவும், மாவட்ட அளவில் தி.மு.க நிறைவேற்றாத வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த மாவட்டத் தலைவர்கள் போராட்டம் நடத்துவார்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஓர் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக பா.ஜ.க செயல்படவிருக்கிறது. அதேபோல, மாநில துணைத் தலைவர் அந்தஸ்திலுள்ள தலைவர்கள் பலரும் இதுவரை வெறும் டம்மியாகவே கட்சிக்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை அளிக்கவிருக்கிறார் அண்ணாமலை" என்றனர்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

`இந்தப் புதிய மாவட்டத் தலைவர்கள் லிஸ்ட், சமூகரீதியிலான பிரதிநிதித்துவத்தைக் கணக்கில்கொண்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். கொங்கு, டெல்டா, தென் மாவட்டங்களில் மாற்றங்கள் நிகழும் எனத் தெரிகிறது. தி.மு.க., அ.தி.மு.க இந்த இரண்டு கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைத் தங்களுடைய வாக்குவங்கியாக மாற்றும் முயற்சியிலும் தீவிரமாகியிருக்கிறது பா.ஜ.க. அதன் முதல்படிதான் இந்த மாவட்டத் தலைவர்கள் மாற்றம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு