Published:Updated:

`சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம்; அது நிறைவேறிவிட்டது’ - திவாகரன் காட்டம்

சசிகலாவுடன் திவாகரன்

சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம். அதற்கான ஏற்பாட்டையும் செய்துவந்தார். தற்போது சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருப்பதன் மூலம் தினகரனின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது.

`சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம்; அது நிறைவேறிவிட்டது’ - திவாகரன் காட்டம்

சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம். அதற்கான ஏற்பாட்டையும் செய்துவந்தார். தற்போது சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருப்பதன் மூலம் தினகரனின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது.

Published:Updated:
சசிகலாவுடன் திவாகரன்

சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவவதாக அறிவித்திருப்பதை தான் வரவேற்பதாகவும், சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என நினைத்து தினகரன் செயல்பட்டார், அது தற்போது நிறைவேறியிருக்கிறது எனவும் சசிகலாவின் தம்பியும், அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளருமான திவாகரன் தெரிவித்திருக்கிறார்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து விடுதலையாகி, சென்னை வந்த சசிகலாவுக்கு அ.ம.மு.க-வினர் வழிநெடுகக் கொடுத்த உற்சாக வரவேற்பு அரசியலில் பேசுபொருளாக மாறியது. அப்போது தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகக் கூறிய சசிகலா, `ஒரு தாய்ப் பிள்ளைகள் இணைந்து செயல்பட வேண்டும், அதுவே என் விருப்பம்’ என தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் அ.தி.மு.க., அ.ம.மு.க இணைப்பு நடக்கும், சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளப்படுவார் என அரசியல் ஆர்வலர்களால் பல யூகங்கள் பேசப்பட்டன. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்கள் சிலரும், சசிகலாவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க-வில் துளியும் இடம் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவந்தனர்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

இதையடுத்து சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இது குறித்த பேச்சுகள் அதிகமாகின. பா.ஜ.க தரப்பில் அ.தி.மு.க., அ.ம.முக இணைப்பு குறித்துப் பேசிவருவதாகவும், நிச்சயம் மாற்றம் இருக்கும் எனவும் அதை விரும்பிய இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்த்தனர்.

இந்தநிலையில், சசிகலா அரசியலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிற. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சசிகலாவின் தம்பி திவாகரன் அரசியல் சூழ்நிலைகள் குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்துவந்தார். மீடியாக்கள் அவரிடம் பேட்டி கேட்டு தொடர்ந்து முயன்று வந்தபோதும் `எல்லோரும் கொஞ்ச நாள் பொறுமையாக இருங்க. உங்களுக்கு நல்ல தீனி இருக்கு’ எனக் கூறிவந்தார்.

இந்தநிலையில், சசிகலாவின் முடிவுக்குப் பிறகு, இது குறித்து திவாகரனிடம் கருத்து கேட்டோம். ``சசிகலா அம்மையார் சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்குவதாக அறிவித்திருக்கிறார். அவரைச் சுற்றி இருக்கக்கூடிய எங்களுடைய சொந்தங்கள் சசிகலாவை முதுகில் குத்த ரெடியாக இருப்பதனாலேயே சசிகலா அரசியலிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த 25 வருடங்களாக அவருடன் இருந்து, பல காரியங்களைச் சாதித்துக்கொண்டு சசிகலாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட, பழம் தின்று கொட்டை போட்ட கேடித்தனமான ஆட்கள் கொடுத்த நிர்பந்தமே அவர் இந்த முடிவுக்கு வரக் காரணம். சசிகலாவுக்கு உடம்பும் சரியில்லை, மனசும் சரியில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவருக்கான பாதுகாப்புக்கான ஏற்பாட்டைச் செய்யத் தவறிவிட்டார்.

திவாகரன்
திவாகரன்

அ.தி.மு.க., அ.ம.மு.க இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த வேளையில், அ.தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரைக் கோபம் ஏற்படுத்தும் வகையில் பேசியதுடன் இணைப்பைக் கெடுக்கக்கூடிய வகையில் தினகரனின் நடவடிக்கை இருந்தது. சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம். அதற்கான ஏற்பாட்டையும் செய்துவந்தார். தற்போது சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருப்பதன் மூலம் தினகரனின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது. இன்னும் இரண்டு தினங்கள் வெயிட் பண்ணுங்க... நிறைய பேசுகிறேன்” என்றார்.