Election bannerElection banner
Published:Updated:

மதுரை: `எனது அரசியல் பார்வை தவறாகாது; தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு!’ - திவாகரன்

திவாகரன்
திவாகரன்

``வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது’ என்று சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளருமான திவாகரன் பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளர் திவாகரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம், ``கொரோனா பேரிடரைத் தடுக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாகக் கையாண்டிருந்தால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்த திவாகரன்
தேவர் சிலைக்கு மாலை அணிவித்த திவாகரன்

எடப்பாடிபோல பலரும் முதல்வர் வேட்பாளர்களாகத் தங்களை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். தேர்தல் கூட்டணி பற்றி விரைவில் முடிவெடுப்போம். மூன்று வண்ணக் கரை வேட்டியை நான் மாற்ற மாட்டேன்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்த திவாகரன்
தேவர் சிலைக்கு மாலை அணிவித்த திவாகரன்

ஸ்டாலினை நான் பாராட்டியபோது தி.மு.க-வில் இணையப்போவதாக கூறினார்கள். அது உண்மையல்ல.
நல்லது செய்பவர்களைப் பாராட்டுவதில் தவறில்லை.

சசிகலாவுக்கு தண்டனைக் காலம் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியே வருவார். சசிகலா முதலமைச்சராகப் பதவி ஏற்க வேண்டாம் என வலியுறுத்தினேன். சசிகலாவைச் சுற்றி நிறைய சதிகள் நடைபெற்றன.

ஜெயலலிதா இறந்தவுடன் மூன்று பேர் முதல்வராக வேண்டும் என முயன்றார்கள். ஓ.பி.எஸ்-ஐ முதல்வராக அறிவிக்க வேண்டும் என நான்தான் ஆலோசனை கூறினேன். ஜெயலலிதா இறந்த நிலையில், சசிகலா முதல்வராக வேண்டும் என ஓ.பி.எஸ் விரும்பினார். நாங்கள்தான் எடப்பாடியை முதல்வராக்கினோம். நான்கு வருட ஆட்சியைச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். சசிகலா ஒப்படைத்த பணியை எடப்பாடி சிறப்பாகக் கையாண்டார்

திவாகரன்
திவாகரன்

சசிகலா குறித்து,இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இதுவரை எந்தக் கருத்தும் சொல்லவில்லை. சசிகலா பற்றி விமர்சிப்பவர்களுக்கு வரும் தேர்தலில் டெபாசிட்கூட கிடைக்காது.

மத்திய அரசால் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழகம் அபாயகரமான சூழலில் உள்ளது. தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது.
விவசாயப் பிரச்னை பெரிதாக இருக்கிறது. தமிழகத்தில் இன்று சாலைகளில் நெல் கொட்டிகிடக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

திருமாவளவன் மனுஸ்மிருதி குறித்துத்தான் பேசினார். அவர் பெண்களை மதிக்கக்கூடியவர். என்னுடைய அரசியல் பார்வை எப்போதும் தவறாகாது. இளைஞர்களுக்கான திட்டங்களை அண்ணா திராவிடர் கழகம் வைத்திருக்கிறது. பதவிக்காகப் பேசும் வாக்குறுதிகளை, பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதில்லை. வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது" என்றார்.

வாழ்த்திய திவாகரன்; அரண்ட அமைச்சர்... அப்செட் சூரி! - கழுகார் அப்டேட்ஸ்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு