Published:Updated:

`இது டிரெய்லர்தான்..விரைவில் காட்சிகள் மாறும்!'-ஜெய் ஆனந்த் நிச்சயதார்த்தத்தில் உற்சாகப்பட்ட உறவுகள்

 நிச்சயதார்த்தம்
News
நிச்சயதார்த்தம்

இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் திருமணத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஜெயஸ்ரீயை தன் மடியிலேயே உட்காரவைத்துப் பாசத்தை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. சசிகலாவும் ஜெயஸ்ரீ மீதும் ஜெய்ஆனந்த் மீதும் அதீத பாசம் வைத்திருக்கிறார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள பண்ணை வீட்டில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்துக்கும் பாஸ்கரனின் மகள் ஜெயஸ்ரீக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில், தினகரனைத் தவிர முக்கிய உறவுகள் அனைவரும் ஆஜராகியிருந்தனர். வரும் 2020 மார்ச் 5-ம் தேதி திருமணத்துக்கான தேதி குறிக்கப்பட்டிருக்கிறது.

ஜெயஸ்ரீ - ஜெய் ஆனந்த்
ஜெயஸ்ரீ - ஜெய் ஆனந்த்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அரசியல் நிகழ்வுகளால் மோதிக்கொண்ட மன்னார்குடி உறவுகள் பலரும், இந்த நிச்சயதார்த்த நிகழ்வின் மூலம் இணைந்துவிட்டனர். டாக்டர் வெங்கடேஷ் தன் மனைவி சகிதமாக நிகழ்சியில் கலந்து கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தினகரனும் அவருடைய மனைவி அனுராதாவும் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்கவில்லை. ` தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே இருக்கும் மனக்கசப்புகளைக் களையக் கூடிய வேலைகளைச் சிறையில் இருந்தபடியே செய்து வருகிறார் சசிகலா. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் திருமண நிகழ்வுக்குத் தினகரன் கட்டாயம் வருவார்' எனவும் மன்னார்குடி வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திவாகரன் குடும்பத்தின் நிச்சயதார்த்த நிகழ்வு குறித்து உறவுகள் வட்டாரத்தில் பேசினோம். `` புதிதாகக் கட்சியைத் தொடங்கிய தினகரன், குடும்பத்தினரை அவமதித்துத் தன்னிச்சையாகச் செயல்படுவதை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்த்தார் திவாகரன். `ராஜா வேஷம் போட்டவர் எல்லாம் நிஜத்தில் ராஜா ஆகிவிட முடியாது' என தினகரனை விமர்சனம் செய்தார்.

நிச்சயதார்த்த விழாவில்...
நிச்சயதார்த்த விழாவில்...

தினகரனும் பதிலுக்கு விமர்சனம் செய்தார். குடும்ப மோதல் வலுப்பெறுவதை சசிகலாவும் ரசிக்கவில்லை. இரு தரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். ஆனாலும், விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெய் ஆனந்த் திருமண நிகழ்வையொட்டி, சிறையிலிருந்து சசிகலா உறுதியாக வருவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். `அக்கா சசிகலா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் திவாகரன். தன்னுடைய மகள் ராஜ மாதங்கியின் திருமணத்துக்கு அப்போதிருந்த நெருக்கடியால் சசிகலா வரவில்லை.

நிச்சயதார்த்தத்தில்
நிச்சயதார்த்தத்தில்

இதுபற்றி உறவினர்களிடம் பேசி ரொம்பவே வருத்தப்பட்டார் திவாகரன். ஆனால், இப்போது மகன் ஜெய் ஆனந்த் திருமணத்தை மன்னார்குடியில் உள்ள சுந்தரக்கோட்டை பண்ணை வீட்டில் சசிகலா தலைமையில் மாநாடு போல நடத்துவதற்கான பணிகளில் வேகம் காட்டத் தொடங்கிவிட்டார்.

அரசியல்ரீதியான மோதலால், ஜெய் ஆனந்த் திருமணத்துக்குத் தினகரன் வருவது சந்தேகம்தான். ஏனென்றால், தினகரனின் உடன்பிறந்த சகோதர்களான சுதாகரன்(சிறையில் இருப்பவர்), பாஸ்கரன் ஆகியோரே தினகரன் திருமணத்துக்கு வருவதை ரசிக்கவில்லை. வேறு சிலர்தான், திவாகரனையும் தினகரனையும் குடும்பரீதியாக சமாதானம் செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

நிச்சயதார்த்தத்தில்
நிச்சயதார்த்தத்தில்

`எல்லோரும் பிரிந்து கிடப்பதால்தான் நாம் நினைக்கும் காரியங்களை அரசியலில் சாதிக்க முடியவில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும்' என சமாதானப் பேச்சின்போது சிலர் முன்வைக்கின்றனர்.

பாஸ்கரன் மகள் ஜெயஸ்ரீ மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட அவரை வளர்ப்பு மகளாகவே பாவித்தார். அதற்கு உதாரணமாக, இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் திருமணத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஜெயஸ்ரீயை தன் மடியிலேயே உட்காரவைத்துப் பாசத்தை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. சசிகலாவும் ஜெயஸ்ரீ மீதும் ஜெய்ஆனந்த் மீதும் அதீத பாசம் வைத்திருக்கிறார்.

`இது டிரெய்லர்தான்..விரைவில் காட்சிகள் மாறும்!'-ஜெய் ஆனந்த் நிச்சயதார்த்தத்தில் உற்சாகப்பட்ட உறவுகள்

இவர்கள் திருமணத்தை உறவுகள் எல்லோரும் கூடி நல்லபடியாக நடத்த வேண்டும் என விரும்புகிறார் சசிகலா. சகோதரர்கள் குடும்பத்தில் நடக்கும் முதல் சுபநிகழ்ச்சி என்பதால் இதில் மனக்கசப்புகளை மறந்து தினகரனும் கலந்து கொள்வார் என நம்புகிறோம்.

மகன் விரும்பிய பெண்ணையே நிச்சயதார்த்தம் செய்துவைத்ததால் நீண்ட நாள்களுக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் திவாகரன். இந்த நிச்சயதார்த்தம் ஒரு டிரெய்லர்தான்.. இந்தத் திருமணத்தின் மூலம் குடும்பத்திலும் அ.தி.மு.க-விலும் பல மாற்றங்கள் நடக்கப்போவது உறுதி" என்கின்றனர் நம்பிக்கையோடு.