Published:Updated:

`டீக்கடை வைத்திருந்தவரை பெரிய ஆளாக உயர்த்தினேன்!' - மன்னார்குடி விழாவில் திவாகரன்

திவாகரன்
News
திவாகரன்

அடுத்த வருடம் மே மாதம் சிறையிலிருந்து சசிகலா வெளியே வர வேண்டும். ஆனால், சிறை நன்னடத்தை விதிகள் மூலம் விரைவில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

`` அடிமட்ட தொண்டர்களாக ரோட்டில் இருந்தவர்களை அமைச்சர்களாகவும் டீக்கடை வைத்திருந்தவரை பெரிய ஆளாகவும் உயர்த்தினேன்" என மன்னார்குடியில் நடைபெற்ற அண்ணா திராவிடர் கழக விழாவில் பேசினார் சசிகலா தம்பி திவாகரன்.

திவாகரன் - ஜெய் ஆனந்த்
திவாகரன் - ஜெய் ஆனந்த்

அண்ணா திராவிடர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் திவாகரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துடன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ம.நடராசன் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். உடன் திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது திவாகரன் பேசியதாவது, ``ஒருவருக்கு கொரோனா வருவதற்கு முன்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத்தான் அரசு கூறிவருகிறதே தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் என்ன என்பதை கூறவில்லை. கொரோனா வைரஸை ஒழிக்க எடுத்த செயல்திட்டம் என்ன என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய 6,000 கோடி ரூபாயில் 4,900 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்தப் பணம் எந்தெந்த வகையில் செலவு செய்யப்பட்டது?
திவாகரன்
திவாகரன்
திவாகரன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு வழங்கிய 6,000 கோடி ரூபாயில் 4,900 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்தப் பணம் எந்தெந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது குறித்து வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சசிகலா நல்ல உடல்நலத்துடன் இருக்க சிறப்பு பிரார்த்தனைகளைச் செய்கிறேன். அவர் அடுத்த வருடம் மே மாதம் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும். ஆனால், சிறை நன்னடத்தை விதிகள் மூலம் விரைவில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்போது அ.தி.மு.க-வினர் சசிகலாவை ஏற்றுக்கொள்வார்கள் மன்னார்குடிக்கும் அ.தி.மு.க-வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

சசிகலா
சசிகலா

போயஸ் கார்டன் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை நீதிமன்றம் அறிவித்தது போல் தீபா, தீபக் இருவரையும் சேரும். கட்சியின் அடிமட்ட தொண்டர்களாக ரோட்டில் இருந்தவர்களை அமைச்சர்களாகவும் டீக்கடை வைத்திருந்தவரை பெரிய ஆளாகவும் உயர்த்தினேன். ஆனால், நான் எந்தப் பதவியையும் பலனையும் அடைந்ததில்லை. அதற்கு ஆசைப்பட்டதும் இல்லை" என்றார்.