Published:Updated:

`லேசான கொரோனா அறிகுறி; சரி செய்யப்பட்டு விட்டது!’ - விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக

விஜயகாந்த்
விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதால், கொரோனா வைரஸின் பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இந்தநிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், தன்னைக் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்வதில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்துவந்த அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பலரையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

தே.மு.தி.க அறிவிப்பு கடிதம்
தே.மு.தி.க அறிவிப்பு கடிதம்

இந்த நிலையில் தே.மு.தி.க சார்பில், விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், `வழக்கமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரிசெய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல்நலத்துடன் விஜயகாந்த் இருக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு