Published:Updated:

``2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?" - அண்ணாமலையைச் சாடிய பிரேமலதா

தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா

``ரெண்டு ஆடு, ரெண்டு பெட்டி ரெண்டு மாடு வைத்திருக்கும் அண்ணாமலைக்கு எதற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?” என தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

``2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?" - அண்ணாமலையைச் சாடிய பிரேமலதா

``ரெண்டு ஆடு, ரெண்டு பெட்டி ரெண்டு மாடு வைத்திருக்கும் அண்ணாமலைக்கு எதற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?” என தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

Published:Updated:
தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா

நாட்டில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே, விருதுநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசுகையில், "பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தற்போது கலாசார சீரழிவு நடைபெற்றுவருகிறது. பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். 'நீட்' விவகாரத்தை இழுத்துக்கொண்டு போவது அரசியல் விளையாட்டு. திமுக, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா
தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா

நீட் விவகாரத்தை அரசியலாக்கி மக்களையும், மாணவர்களையும் குழப்பாதீர்கள். சொத்து வரியை 50% உயர்த்தலாம்.‌ ஆனால் 150% உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள். முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ஜாலத்தில் மட்டும் திமுக மிரட்டல் விடுத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'திராணியிருந்தால் கைதுசெய்து பாருங்கள்' என அண்ணாமலை சொன்னதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காததிலிருந்தே அண்ணாமலை சொன்னது உண்மைதான்‌ என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரெண்டு ஆடு, ரெண்டு பெட்டி, ரெண்டு மாடு வைத்திருப்பவருக்கு எதற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு? தைரியமிருந்தால் அந்தப் பாதுகாப்பு வேண்டாமென மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதட்டுமே...

தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா
தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், இலங்கை நாடுகளின் நிலையைப் பயன்படுத்தி எல்லைப் பிரச்னையையும், கச்சத்தீவையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித் தமிழீழம் உருவாக வழிவகுக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism