Published:Updated:

``தீபாவளிப் பரிசு யார் கொடுத்தது?” - கேள்வி எழுப்பிய திமுக நிர்வாகி; மன்னிப்புக் கேட்ட தஞ்சை மேயர்!

மேயர் சண்.இராமநாதன் ( ம.அரவிந்த் )

தீபாவளியை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சியிலுள்ள கழக நிர்வாகிகளுக்கு தலைவரால் பரிசு வழங்கப்பட்டது. அதை மாநகரச் செயலாளரான மேயர், தான் கொடுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி பெருமைபட்டுக்கொள்கிறார்.

``தீபாவளிப் பரிசு யார் கொடுத்தது?” - கேள்வி எழுப்பிய திமுக நிர்வாகி; மன்னிப்புக் கேட்ட தஞ்சை மேயர்!

தீபாவளியை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சியிலுள்ள கழக நிர்வாகிகளுக்கு தலைவரால் பரிசு வழங்கப்பட்டது. அதை மாநகரச் செயலாளரான மேயர், தான் கொடுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி பெருமைபட்டுக்கொள்கிறார்.

Published:Updated:
மேயர் சண்.இராமநாதன் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் தி.மு.க-வில் மாநகரம் சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில், `வார்டு செயலாளர்கள், பகுதிக் கழக செயலாளர்களுக்கு எதிராகச் செயல்படுவதை மாநகரச் செயலாளரான மேயர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என நிர்வாகி ஒருவர் எச்சரிப்பதுபோல் கோஷ்டிப்பூசல் குறித்து மேடையில் வெளிப்படையாகப் பேசியது பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

தி.மு.க பகுதி கழக செயலாளரான நீலகண்டன்
தி.மு.க பகுதி கழக செயலாளரான நீலகண்டன்

தஞ்சாவூர் தி.மு.க-வில் மாநகரக் கழகம் சார்பில் மாநகரச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகரச் செயலாளரும், மேயருமான சண்.இராமநாதன் கூட்டத்துக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கலந்துகொள்ளவில்லை. வரும் 27-ம் தேதி மாநில இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள், அதைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல கருத்துகளை நிர்வாகிகள் பேசினர்.

குறிப்பாக, மாநகரத்தில் நிலவும் உட்கட்சிப்பூசல் குறித்து நிர்வாகிகள் பலரும் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. கீழவாசல் பகுதி கழகச் செயலாளரான நீலகண்டன் பேசுகையில், ``வட்டச் செயலாளர்களிடம் கலந்தாலோசிக்காமல் குழு அமைக்கின்றனர். அதற்கு மாநகரக் கழகம் என்ன நடவடிக்கை எடுத்தது எனத் தெரியவில்லை. தீபாவளியை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சியிலுள்ள கழக நிர்வாகிகளுக்குத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது. அதை மாநகரச் செயலாளரே கொடுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி, பெருமைபட்டுக்கொள்கிறார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கூட்டம்
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கூட்டம்

பகுதிக் கழகச் செயலாளர் பதவி எதற்கு நியமனம் செய்தார்கள் எனத் தெரியவில்லை. மாநகரச் செயலாளர் அவர்களிடம் கலந்தாலோசிப்பதில்லை. மாநகரச் செயலாளருக்கும், பகுதிக் கழகச் செயலாளர்களுக்கும் என்ன வித்தியாசம், என்ன பொறுப்பு, அவர்கள் கடமை என்னவென்று கழக முன்னோடியான இறைவன் பேசும்போது தயவுசெய்து எடுத்துக் கூற வேண்டும். வார்டு செயலாளருக்கு நோட்டீஸ் செல்வதில்லை. ஒரு வார்டுக்கு மூன்று, நான்கு அணிகளாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு கோஷ்டிகள் உருவாக்கப்படுகின்றன.

இந்தப் பிரச்னை எனக்கு மட்டுமல்ல, எல்லா வார்டு செயலாளர்களுக்கும் இருக்கிறது. மாநகரச் செயலாளர் இது போன்று செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நன்றாக இருக்காது. பார்த்துகோங்க” என எச்சரிக்கும் வகையில் பேசி முடிக்க, இதை ஆமோதிப்பதுபோல் கூட்டத்தில் பலத்த கைதட்டு எழுந்தது. பின்னர் பேசிய நிர்வாகி ஒருவர், `கழகத்தில் பிரிவுகள் இருந்தால் அது வளர்ச்சிக்கு அறிகுறி. அதேநேரத்தில் பிளவுகள் இருப்பது வீழ்ச்சிக்கு அறிகுறி.

மேயர் சண்.இராம நாதன், நீலகண்டன்
மேயர் சண்.இராம நாதன், நீலகண்டன்

சின்னகுச்சியாக இருந்தாலும் சேர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும்’ என்றார். பின்னர் பேசிய மூத்த முன்னோடி இறைவன், ``நிர்வாகிகள் பேசுறதைப் பார்க்கும்போது மனசுல கசப்பு, விரோதம் இன்னும் இருக்கு என்பதைக் காட்டுகிறது. இப்ப வெளிப்படையாகப் பேசுறதுக்கே பயமா இருக்கு. முன்பெல்லாம் அப்படிக் கிடையாது. இப்போ பேசுறதுக்கு முன்னாடி இவர் யார் ஆளுன்னு பார்க்க வேண்டிய நிலை இருக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்” என்றார். பின்னர் பேசிய மேயர் சண்.இராமநாதன், ``பகுதிக் கழகச் செயலாளர் கூறிய கருத்துக்கு கழகத்தின் வளர்ச்சிக்காக மன்னிப்பு கேட்கிறேன், மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை” என்றார்.