Published:Updated:

வட்டப் பொருளாளர் பதவி கிடைக்காததால் விரக்தி; அண்ணா அறிவாலயத்தில் தீ குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

தீ குளிக்க முயற்சி

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலைகளுக்கு முன் நிர்வாகி ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மேல் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

தி.மு.க உட்கட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இன்று வேட்பு மனுக்கள்மீது பரிசீலனை நடைபெற்றது. இந்தச் சூழலில், அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே வழக்கம் போல தி.மு.க நிர்வாகிகள் திரண்டிருந்தனர். அப்போது பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலைகளுக்கு முன் நிர்வாகி ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மேல் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

காப்பாற்றியபோது
காப்பாற்றியபோது

இதனைப் பார்த்த, தி.மு.க-வினர் மற்றும் போலீஸார் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முன்னாள் பொருளாளர் அமுல் ராஜ் என்பது தெரியவந்தது. வட்ட பொருளாளர் பதவி கொடுக்கவில்லை என்று தீக்குளிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். தி.மு.க நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அண்ணா அறிவாலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.