Published:Updated:

``அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு!” - அவதூறு வழக்கை ரத்து செய்ய ஸ்டாலின் மனு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகப் போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின் ( விகடன் )

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
விகடன்

தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், தாக்கல் செய்த மனுவில், ``கடந்த பிப்ரவரி 15 -ம் தேதி தேர்தல் சமயத்தில் திண்டுக்கல் மாவட்ட பள்ளப்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டேன்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக எனக்கு எதிராக அரசு வழக்கறிஞர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உயர்நீதிமன்ற கிளை
உயர்நீதிமன்ற கிளை
ஈ.ஜெ.நந்தகுமார்

தி.மு.க., மீதான அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக உள் நோக்கத்துடன் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைக் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறிவிட்டது. பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவை இருப்பதையும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

மேலும் இந்த வழக்கில் எவ்விதமான முகாந்திரமும் இல்லை. எனவே, என்மீதான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் விசாரணைக்கு தடை விதித்து, வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்

ஸ்டாலின்
ஸ்டாலின்
விகடன்

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெகு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.