Published:Updated:

`அச்சப்படாதீங்க; பி.கே தலையிடமாட்டார்!' -அறிவாலயக் கூட்டத்தில் சுட்டிக் காட்டிய ஸ்டாலின்

தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டம்
தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டம்

`தி.மு.க பிரசாந்த் கிஷோருடன் கைகோத்திருப்பதால் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதற்காக நீங்கள் ஒன்றும் அச்சப்படத் தேவையில்லை'.

திராவிடக் கட்சிகளை எதிரியாகப் பிரகடனம் செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. இதை மாற்றவும் இந்துக்களின் வாக்குகளைப் பெறவும் தி.மு.க, அதிரடியான சில விஷயங்களை வகுக்கத் தொடங்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் மாவட்டச் செயலாளர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும், பிரசாந்த் கிஷோர் வருகை குறித்து தி.மு.க மாவட்டச் செயலாளர்களின் மனஓட்டம் உள்பட பல்வேறு விவாதங்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அரங்கேறியிருக்கின்றன.

ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட செயலாளர்கள் சிலர், ``தமிழகச் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களை அடுத்து காவலர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாகவும் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க ஆட்சியின் ஒட்டுமொத்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதைப் பற்றி முழுமையான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு ஸ்டாலின் பேசத்தொடங்கினார்.

தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டம்
தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டம்

`ஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஆளும் கட்சியினர் பணம் மற்றும் அதிகார பலத்தை எதிர்த்துப் பல இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. அதற்காக உழைத்த உங்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்' என்று ஆரம்பித்தார். `அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. அதற்காக நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று முக்கிய நிர்வாகிகள் உங்களுக்குத் தகவலைச் சொல்வார்கள். அதன்படி செயல்படுங்கள்' என்றார். தி.மு.க-வினருக்கு எப்போதும் நகர்ப்புறம்தான் கைகொடுக்கும். இந்தமுறையும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அதற்காக இப்போதே தயாராகுங்கள்' என்றவர்,

`ரெய்டு' விஜய், `தனி வழி' ரஜினி, பிரசாந்த் கிஷோர் பூகம்பம்..! மிஸ்டர் கழுகின் அரசியல் அப்டேட்ஸ்

தொடர்ந்து,`உள்ளாட்சித் தேர்தலை மட்டும் மனதில் வைத்துச் செயல்படவேண்டாம். சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்வது எப்படி என்று திட்டமிடலை வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்குங்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரையிலும் நடந்த முறைகேடுகள், அ.தி.மு.க-வினர் செய்த ஊழல்கள் பற்றிய புள்ளி விவரங்களைக் கையில் எடுங்கள். கண்டிப்பாகத் தேர்தல் நேரத்தில் பயன்படும்" என்றார்.

`அச்சப்படாதீங்க; பி.கே தலையிடமாட்டார்!' -அறிவாலயக் கூட்டத்தில் சுட்டிக் காட்டிய ஸ்டாலின்

சம்பந்தமில்லாமல் எதற்காக இதை ஸ்டாலின் எடுக்கச் சொல்கிறார் என ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சிலரிடம் மெல்லிய குரலில் பேச, `பிரசாந்த் கிஷோர் எடுக்கச் சொல்லியிருப்பார் போல' என முணுமுணுத்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து கிஷோரின் பேச்சை எடுத்தார் ஸ்டாலின். `தி.மு.க பிரசாந்த் கிஷோருடன் கைகோத்திருப்பதால் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதற்காக நீங்கள் ஒன்றும் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் வந்தால் அவர்களது வேலையை மட்டும் பார்ப்பார்கள். நீங்கள் உங்களது வேலையை மட்டுமே பார்க்கப் போகிறீர்கள். உங்களது வேலைகளில் தலையிடமாட்டார்கள்" என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எடுத்துக்காட்டாக நமக்கு நாமே பயணத்தை சுட்டிக் காட்டி பேசியிருக்கிறார். இதனால், பல மாவட்டச் செயலாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

திராவிடக் கட்சிகளை எதிரியாகப் பிரகடனம் செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. இதை மாற்றவும் இந்துக்களின் வாக்குகளைப் பெறவும் தி.மு.க அதிரடியான வியூகங்களை வகுக்கத் தொடங்க இருக்கிறது. அதுவும் பிரசாந்த் கிஷோரின் உதவியோடு நடக்கப்போகிறது" என்கின்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு