Published:Updated:

`செல்லூர் ராஜு மட்டுமல்ல ஜெயக்குமாரும் விஞ்ஞானிதான்!’ -அமைச்சர்களைக் கலாய்த்த கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

`கூட்டணி விரிசல்’ தொடர்பாக தி.மு.க-காங்கிரஸ் இடையில் நடைபெற்ற விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் துரைமுருகனும் அழகிரியும் மேடையில் கைகுலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநாடு, வேலூர் மண்டித் தெருவில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார்.

துரைமுருகன்
துரைமுருகன்

தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

துரைமுருகன் பேசுகையில், ``நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள்தான். எத்தனையோ இனங்கள் உள்ளன. அதில், நீங்களும் ஓர் இனம். மதத்தால் வேறுபட்டவர்களே தவிர வேறு ஒன்றுமில்லை. ஹிட்லர் யூதர்களை அழித்தார். இவர்கள், இஸ்லாமியர்களைக் குறி வைக்கிறார்கள்.

துரைமுருகன்
துரைமுருகன்

ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். ஒரு இனத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள். இது, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான எச்சரிக்கை தான். கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் இவர்களை எதிர்க்க வேண்டும்’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறுகையில், ``தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இந்தக் கூட்டணி உடைந்த கண்ணாடி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். அ.தி.மு.க-வில் செல்லூர் ராஜுதான் விஞ்ஞானி என்று பார்த்தால் ஜெயக்குமாரும் விஞ்ஞானியாகத்தான் இருக்கிறார்’’ என்றார் கிண்டலாக.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

`கூட்டணி விரிசல்’ தொடர்பாக தி.மு.க-காங்கிரஸ் இடையில் நடைபெற்ற விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் துரைமுருகனும் அழகிரியும் மேடையில் கைகுலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின் செல்ல