Published:Updated:

மேயருக்கு எதிராக பொங்கிய திமுக கவுன்சிலர்கள் - மதுரை மாநகராட்சியில் வெடித்த உட்கட்சி கலகம்?!

மதுரை மேயர் இந்திராணி

``வார்டுகளுக்குத் தேவையான, அத்தியாவசியமான பணிகளை மாநகராட்சி செய்வதில்லை. மேயரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை” என்று திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே மாமன்ற கூட்டத்தில் புகார் எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயருக்கு எதிராக பொங்கிய திமுக கவுன்சிலர்கள் - மதுரை மாநகராட்சியில் வெடித்த உட்கட்சி கலகம்?!

``வார்டுகளுக்குத் தேவையான, அத்தியாவசியமான பணிகளை மாநகராட்சி செய்வதில்லை. மேயரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை” என்று திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே மாமன்ற கூட்டத்தில் புகார் எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மதுரை மேயர் இந்திராணி

மதுரை மாநகராட்சியில் தி.மு.க-வை சேர்ந்த இந்திராணி பொன் வசந்த் மேயராகவும், சி.பி.எம்-ஐ சேர்ந்த நாகராஜன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சிபாரிசால் இப்பதவிக்கு இவர்கள் நியமிக்கப்பட்டதை இன்று வரை பெரும்பாலான தி.மு.க கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..

இந்திராணி - பொன் வசந்த்
இந்திராணி - பொன் வசந்த்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அது மட்டுமின்றி இந்திராணி பொன் வசந்த் பொறுப்பேற்ற நாளிலிருந்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தில் கணவர் பொன் வசந்தின் தலையீடு ஒருபக்கமென்றால், மேயருக்கு ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி, பழனிவேல் தியாகராஜனின் அலுவலகத்தில் பணியாற்றிய பெண்மணி நியமிக்கப்பட்டு அனைத்து விஷயத்திலும் அவர் தலையிடுவதும் சர்ச்சையாகி வருகிறது. இந்த களேபரத்துக்குள் சிக்கி தவித்த மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் கடந்த மாதம் இடமாறுதல் வாங்கிக் கொண்டு சென்று விட்டாராம்.

மேயர் கொடுத்த கறி விருந்து
மேயர் கொடுத்த கறி விருந்து

இந்நிலையில் புதிய ஆணையராக சிம்ரன் ஜித் சிங் வந்தாலும் மந்தமான ஸ்மார்ட் சிட்டி வேலைகள், வரி வசூல் செய்வதில் பாரபட்சம், அத்தியாவசியப் பணிகள், தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை என்று மாநகராட்சியே தேக்கமடைந்துள்ளது என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் 4-வது மாமன்ற கூட்டம் நடந்தது. வழக்கம்போல் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ம.தி.மு.க எம்.எல்.ஏ பூமிநாதன், 'மாநகராட்சியில் முக்கியப் பணிகள் ரொம்ப மெதுவாக நடக்கிறது. ஆக்கப்பூர்வமாக திட்டமிட்டு பாதாள சாக்கடைப் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடியுங்கள்" என்று பேச, பின்பு பேசிய தி.மு.கவின் மண்டலத்தலைவர்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தையும், மேயரையும் விமர்சித்துப் பேசினார்கள். இவை எதற்கும் மேயர் பதில் சொல்லவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க நிர்வாகியும், கவுன்சிலருமான ஜெயராம் பேசும்போது, "எம்.ஜி.ஆரால் 1980-ல் கட்டப்பட்ட மாநகராட்சி திருமண மண்டபம் அப்பகுதி மக்களுக்கு பயன்பட்டது. என் திருமணமே அங்குதான் நடந்தது. இடையில் அதில் கரிமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வாடகைக்கு கொடுத்ததால் மக்களால் பயன்படுத்த முடியவில்லை. 2015-லிருந்த் 40 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கிறார்கள். அதை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வரவேண்டும். அதை புதுப்பிக்க என் சொந்தப்பணம் 10 லட்சத்தை தருகிறேன். அதுபோல் என் வார்டில் மற்றொரு திருமண மண்டபத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு மக்கள் அதிகம் வருவதில்லை. அதையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஜெயராம்
ஜெயராம்

மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் 1,950 பேர் பணிபுரிவதாக கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், 750 பேர்தான் வேலை செய்கிறார்கள். மீதிப்பேரின் ஊதியம் எங்கே செல்கிறது.? அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தொழிலாலாருக்கும் 21,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகக் குறைவாக 8000-ம் தான் வழங்கப்படுகிறது. மீதிப் பணமெல்லாம் எங்கே போகிறது? இப்போதும் கூட்டத்தில் பங்கேற்றால் கவுன்சிலர்களுக்கு வெறும் 800 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. ஆனால், வார்டில் உள்ள சாக்கடைகளை உற்று பார்த்து பார்த்து பல ஆயிரம் மருத்துவருக்கு செலவு செய்கிறோம்" என்று தொடர்ந்து பேச மேயர் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார்.

சொந்த கட்சி கவுன்சிலர்களின் பரபரப்பான பேச்சுக்களுடன் கூட்டம் முடிந்தபின், மேயர் இந்திராணி பொன் வசந்த் ஏற்பாட்டில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்தரார்களுக்கு அண்ணா நகரில் உள்ள மேயர் பங்களாவில் கறி விருந்து நடந்தது. இந்த நிகழ்வுக்கு மதுரை மாவட்டத்திலுள்ள 4 மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளை அழைக்காமல் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மட்டும் அழைத்து விருந்து வைபவத்தை நடத்தினார். இதுவே உட்கட்சி பூசல் இருப்பதை உறுதி செய்வதாக சொல்கிறார்கள். மேலும் பெரும்பாலான தி.மு.க கவுன்சிலர்கள் மேயரின் விருந்தில் கலந்துகொள்ளவில்லை. அழைப்பிதழில் பழனிவேல் தியாகராஜன் பெயர் மட்டும் போடப்பட்டிருந்தது.

மேயரின் கறி விருந்து அழைப்பிதழ்
மேயரின் கறி விருந்து அழைப்பிதழ்

மற்றொரு அமைச்சரான பி.மூர்த்தி பெயரோ, மற்ற எம்.எல்.ஏக்கள் பெயரோ குறிப்பிடவில்லை. மேலும் அழைப்பதிழில் தி.மு.க அடையாளம் எதுவுமில்லை என்று கட்சியினர் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனராம்.

மதுரை மாநகராட்சியில் உட்கட்சி கலகம் தொடங்கிவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism