Published:Updated:

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்; களைகட்டிய அறிவாலயம்... குவிந்த விண்ணப்பங்கள்! | ஸ்பாட் ரிப்போர்ட்

திமுக - அண்ணா அறிவாலயம்

செப்டம்பர் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அளிக்குமாறு தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 22-ம் தேதி முதல்நாளே கூட்டம் களைகட்டியது.

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்; களைகட்டிய அறிவாலயம்... குவிந்த விண்ணப்பங்கள்! | ஸ்பாட் ரிப்போர்ட்

செப்டம்பர் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அளிக்குமாறு தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 22-ம் தேதி முதல்நாளே கூட்டம் களைகட்டியது.

Published:Updated:
திமுக - அண்ணா அறிவாலயம்

ஒவ்வோர் அங்கீகரிக்கப்பட்டக் கட்சிகளும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி, அதன் அறிக்கையைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, தி.மு.க-வில் 15-வது உட்கட்சிப் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை பேரூர், ஒன்றியம், நகரம், மாநகரம், பகுதி, வட்டம் ஆகியப் பதவிகளுக்கானத் தேர்தல் நடந்துமுடிந்து, கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது தேர்தல். முப்பெரும் விழா முடிந்தக் கையோடு மாவட்டச் செயலாளர்களுக்கானத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என ஜூ.வி-யில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். செப்டம்பர் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அளிக்குமாறு தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 22-ம் தேதி முதல்நாளே கூட்டம் களைகட்டியது.

களைகட்டிய அறிவாலயம்
களைகட்டிய அறிவாலயம்

அறிவாலய முக்கிய நபர் ஒருவர் இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார். ``முதல்நாளில் கன்னியாகுமரி கிழக்கு-மேற்கு, தூத்துக்குடி வடக்கு-தெற்கு, திருநெல்வேலி கிழக்கு-மத்திய, தென்காசி வடக்கு-தெற்கு, விருதுநகர் வடக்கு-தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் கிழக்கு-மேற்கு, தேனி வடக்கு-தெற்கு, மதுரை வடக்கு-தெற்கு-மாநகர் ஆகிய மாவட்டங்களுக்கான மனுத்தாக்கல் நடைபெற்றது. இதற்கு முன்பாகவே, அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டன. அதனைப் பூர்த்திசெய்து, தாக்கல் செய்வது மட்டும்தான் இந்த மூன்று நாள்களும் நடைபெறும். மாவட்டச் செயலாளர் தேர்தல் என்றால் பெரும்பாலும் ஒருவர் என்றே நினைக்கிறார்கள். ஆனால், சரியாகச் சொன்னால் மாவட்டக் குழு தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மாவட்டக் குழு
மாவட்டக் குழு

மாவட்ட அவைத் தலைவர், மாவட்டச் செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் மூவர் அவர்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும். அடுத்து, பொருளாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குறைந்தபட்சம் இருவர், பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகபட்சமாக 18 பேர் வரை இருக்கலாம். செயற்குழு - பொதுக்குழுவிலும் கண்டிப்பாக ஒருவர் பெண்ணாக இருத்தல் வேண்டும்.

பணம் கட்டும் நிர்வாகிகள்
பணம் கட்டும் நிர்வாகிகள்

இந்த ஒட்டுமொத்த குழுவுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைக் கொடுத்திட வேண்டும், ஆனால் பணத்தை மட்டும் ஒவ்வொரு பொறுப்புக்கும் தலா 25,000 ரூபாய் தனித்தனியாகக் கொடுத்திட வேண்டும். இதன்மூலம், குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டம் மூலம் 3 லட்ச ரூபாய் கட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.

ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா உள்ளிட்டோர்
ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா உள்ளிட்டோர்

செப்டம்பர் 22-ம் தேதி, காலை 10 மணிக்கு மனுத்தாக்கல் தொடங்கியது. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா உள்ளிட்டோர் அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் அமர்ந்துகொண்டு, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களையும், ரொக்கத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.

பணம் எண்ணும் எந்திரத்துடன் ஊழியர்கள்
பணம் எண்ணும் எந்திரத்துடன் ஊழியர்கள்

அவர்களுக்கு அருகில் அறிவாலய மேலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பணம் எண்ணும் எந்திரத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். பெறப்படும் பணத்தை எந்திரத்தில் வைத்து சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்த பின்னரே விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதற்கான அக்னாலெஜ்மென்ட் ரசீதைக் கொடுத்தனர்.

காலை மனுத்தாக்கல் தொடங்கியதுமே தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனுத்தாக்கல் செய்தனர். தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரான செல்லதுரைக்கு எதிராக, செங்கோட்டை ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய சேர்மனுமாகிய ரவிசங்கர் என்பவர் ஆதரவாளர்களுடன் விண்ணப்பித்தார். தொடர்ந்து, திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான அப்துல் வஹாப் மீண்டும் மாவட்டப் பொறுப்புக்கு விண்ணப்பித்தார். மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறனுக்கு எதிராக, திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் தனபாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் பாலாஜி ஆகியோர் தனித்தனியாக விண்ணப்பம் செய்தனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் கன்னியாகுமரி மேயர் மகேஷும், மேற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜும் ஒன்றாக வந்து மனுத்தாக்கல் செய்தனர்.

கம்பம் செல்வேந்திரன், ஜெயகுமார்
கம்பம் செல்வேந்திரன், ஜெயகுமார்

அதைத் தொடர்ந்து, தேனி தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயகுமார் விண்ணப்பித்தார். அவருடன் முன்னாள் எம்.பி கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்டப் பலர் வந்திருந்தனர்.

விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும் நிர்வாகிகள்
விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும் நிர்வாகிகள்

அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மீண்டும் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் விண்ணப்பம் செய்தார். தொடர்ந்து, அதே ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்னும் சிலர் விண்ணப்பித்தனர். சிவகங்கை மாவட்டம் சார்பில் சிட்டிங் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பெரியகருப்பன் விண்ணப்பம் செய்தார்.

விண்ணப்பிக்கும் நிர்வாகிகள்
விண்ணப்பிக்கும் நிர்வாகிகள்

அதைத் தொடர்ந்து நெல்லையில் ஆவுடையப்பனுக்கு எதிராக சிலரும், உதிரியாக நிறைய பேரும்,மதுரையில் கோ.தளபதியை எதிர்த்து இருவரும் என நிறைய பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு, செப்டம்பர் 22-ம் தேதி ஒதுக்கப்பட்ட அத்தனை மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் நேரில் வந்து மனுத்தாக்கல் செய்துவிட்டுச் சென்றனர். இருந்தபோதும், தலைமை ஒட்டுமொத்த 72 மாவட்ட அமைப்புகளில் குறைந்தது 5 முதல் 8 பேர் வரைதான் மாற்ற முடிவுசெய்திருக்கிறார்கள். தலைமை மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகவும், கட்சிக்கு நிதி திரட்டுவதற்காகவுமே இந்த மனுத்தாக்கல் வைபவம்!” என்று முடித்தார்.