Published:Updated:

“எவனோ ஒரு மடையன் வீடியோ எடுத்துப் போட்டிருக்கான்!”

துரைமுருகன் - சாரதி குமார் - ரம்யா
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன் - சாரதி குமார் - ரம்யா

வீடியோ சர்ச்சைக்கு துரைமுருகனின் பதில்...

“எவனோ ஒரு மடையன் வீடியோ எடுத்துப் போட்டிருக்கான்!”

வீடியோ சர்ச்சைக்கு துரைமுருகனின் பதில்...

Published:Updated:
துரைமுருகன் - சாரதி குமார் - ரம்யா
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன் - சாரதி குமார் - ரம்யா
பெண் விவகாரத்தில் சிக்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு ஆதரவாக துரைமுருகன் பேசியதாக வெளிவந்திருக்கும் வீடியோ ஒன்று, வேலூர், திருப்பத்தூர் பகுதி தி.மு.க-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர தி.மு.கழகப் பொறுப்பாளர் சாரதி குமார் மீது அவரின் மனைவி ரம்யா, பிப்ரவரி 21-ம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், `நானும் சாரதி குமாரும் 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டோம். பெண் குழந்தை பிறந்த நிலையில், சாரதி குமார் சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தவறான உறவு ஏற்படுத்திக்கொண்டார். குடும்ப கௌரவம் கருதி, இத்தனை நாள்களாகச் சகித்துக்கொண்டேன்.

சாரதி குமார் என்னுடைய 140 பவுன் நகை, 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறித்து அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதுபற்றிக் கேட்டதற்கு, தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிப்ரவரி 19-ம் தேதி, அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சாரதி குமார் மீது புகார் கொடுத்தேன். நான் சொன்னதைக் கேட்டுக்கொண்ட அவர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். அறிவாலயத்தைவிட்டு வெளியில் வந்த என்னை சாரதி குமார் அவமானப்படுத்தி, மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தார். என் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, கணவர் சாரதி குமாரைக் கைது செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டி ருந்தார்.

அதையடுத்து, வாணியம்பாடி நகரப் பொறுப்பிலிருந்து சாரதி குமார் நீக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து, சாரதி குமாரின் ஆதரவாளர்கள் துரைமுருகனை காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து, “சாரதி குமாருக்கு மீண்டும் நகரப் பொறுப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது துரைமுருகன் பேசியதைத்தான் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதுதான் இப்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

அந்த வீடியோவில், “என்னைப் பொறுத்தவரை, சாரதி குமார் எனக்கு வேணும்னு நான் தளபதி கிட்ட சொல்லிட்டேன். அவன்தான் என் பையனை ஜெயிக்கவெச்சான்; கட்சியைக் காப்பாத்தி இருக்கான். வாணியம்பாடிக்கு சாரதி திரும்பவும் வேணும்னு தளபதிகிட்ட சொன்னதுக்கு ‘நீங்க அமைதியா போங்க... பழையபடி பதவியைத் தந்துடுறேன்’னு சொல்லிட்டார்” என்கிறார் துரைமுருகன்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து துரைமுருகன் மீதும் சர்ச்சை கிளம்பியது. “பெண் விவகாரத்தில் சிக்கிய நிர்வாகிக்கு ஆதரவாக, கட்சியின் பொருளாளரே இப்படிப் பேசலாமா?” என்று தி.மு.க-வினர் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ரம்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் சாரதி குமார் மற்றும் அவரின் தாய் உமாபாய் ஆகிய இருவர் மீதும் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

என் மனைவி
ஒரு கோடி ரூபாய் கேட்கிறார்

இதுதொடர்பாக சாரதி குமாரிடம் கேட்டதற்கு, “அது என் குடும்ப விவகாரம். சிலர், வேண்டுமென்றே என்னை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். என்மீதான புகாரில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கத்தான் பொறுப்பிலிருந்து விலகினேன். என் மனைவி ஒரு கோடி ரூபாய் கேட்கிறார். அவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடியாது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளேன். என் ஆதரவாளர்கள், பொருளாளர் துரைமுருகனைப் பார்த்து வலியுறுத்தினர். வேண்டாதவர்கள் யாரோ, அதை வீடியோ எடுத்து பொருளாளர் குறித்து அவதூறு பரப்பியுள்ளனர். அவ்வளவு பெரிய தலைவர், என் ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டும்விதமாகவும் திருப்திப்படுத்தவும் பேசியிருக்கிறார். அது எங்களுக்கு மகிழ்ச்சிதான். தளபதிக்கும் பொருளாளருக்கும் கட்டுப்பட்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு நான் நடந்துகொள்வேன்” என்றார் நிதானமாக.

சாரதி குமார் - ரம்யா
சாரதி குமார் - ரம்யா

சாரதி குமாரின் மனைவி ரம்யாவிடம் பேசினோம். ‘‘சாரதி மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள பெண்ணால் தினமும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தேன். விவரிக்க முடியாத அளவுக்கு என் முன்னாலேயே ஆபாசமாக நடந்துகொண்டனர். நான் ஒரு கோடி ரூபாய் கேட்பதாக சாரதி குமார் சொல்வது அப்பட்டமான பொய். என்னிடமிருந்து பறித்த சொத்துகளையும் நகைகளையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்தால் போதும்” என்றார்.

இதுகுறித்து துரைமுருகனிடம் பேசினோம். ‘‘என்கிட்ட தினமும் நூறு பேர் ஏதாவது ஒரு பிரச்னையோடு குமுறிக்கிட்டு வர்றாங்க. கட்சிக்காரர்களிடம் சட்டம் பேசிக் கிட்டு இருக்க முடியாது. `விடுய்யா, நான் பார்த்துக்கிறேன். காப்பாத்திவிடுறேன்’னுதான் சொல்ல முடியும். அதை எவனோ ஒரு மடையன் வீடியோ எடுத்துப் போட்டிருக்கான். இனிமே யாராவது வந்தா, போனைப் பிடுங்கி வெச்சிக்கிட்டுதான் பேசணும் போல. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. நான் யதார்த்தவாதி” என்றார் தன் வழக்கமான பாணியில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism