Published:Updated:

தேர்தல் 2021: இஸ்லாமியக் கட்சிகளா... கட்சியிலுள்ள இஸ்லாமியர்களா?! - தி.மு.க எடுத்த திடீர் முடிவு

அண்ணா அறிவாலயம்

`அ.தி.மு.க கூட்டணியில் சேர எந்த இஸ்லாமியக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க-வோ, முஸ்லிம் லீக்கைத் தவிர மற்ற இஸ்லாமியக் கட்சிகளைப் பொருட்படுத்தவில்லை.’

தேர்தல் 2021: இஸ்லாமியக் கட்சிகளா... கட்சியிலுள்ள இஸ்லாமியர்களா?! - தி.மு.க எடுத்த திடீர் முடிவு

`அ.தி.மு.க கூட்டணியில் சேர எந்த இஸ்லாமியக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க-வோ, முஸ்லிம் லீக்கைத் தவிர மற்ற இஸ்லாமியக் கட்சிகளைப் பொருட்படுத்தவில்லை.’

Published:Updated:
அண்ணா அறிவாலயம்

சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் விருப்ப மனுக்களை வாங்கிவருகின்றன. இதில் கூட்டணிகளுக்கான இடங்கள் இன்னும் முடிவாகாமலேயே இரண்டு கூட்டணிகளும் தொகுதிகளில் வேலைகளைத் தொடங்கிவிட்டன.

சிறுபான்மையினரின் வாக்குகளை, குறிப்பாக இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளும்ம் கடுமையாக வேலை செய்துவருகின்றன.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு எதிர்நிலையிலிருக்கும் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் வாக்குகள் கடந்த தேர்தல்களைவிட இம்முறை அதிகமாகத் தங்களுக்கு எந்தவொரு சேதாரமுமில்லாமல் கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் திடமான நம்பிக்கையுடன் இருக்கிறார்.

அதேநேரத்தில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்ட வழக்குகள் வாபஸ் என அறிவித்தது மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களின் மற்ற கோரிக்கைகளைக் கேட்டுப் பெறுவது என்று முதலமைச்சர் எடப்பாடியும், மற்ற அமைச்சர்களும் அவர்களின் ஆதரவைப் பெற தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.

ஆனாலும், மைனாரிட்டி வாக்குகள் மீது நம்பிக்கையின்றிதான் ஆளும்கட்சி இருக்கிறது. முன்பு மாதிரி கெத்து காட்ட முடியாமல், தி.மு.க கூட்டணியில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றன.

ஆனாலும், ஓரளவு இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தி.மு.க தலைமையை எதிர்பார்த்து இஸ்லாமியக் கட்சிகள் காத்திருக்கின்றன.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லாதபோதும் இஸ்லாமியக் கட்சிகளை இடம்பெறச் செய்ய வேண்டுமென்பதற்காக கடைசி நேரத்தில் அன்வர்ராஜா மூலம் மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து தமிமுன் அன்சாரியைப் பிரித்து, அவர்களுக்கு இரண்டு இடங்களையும், நிதியையும் கொடுத்து வேலையும் பார்த்ததில் அன்சாரி மட்டும் வெற்றி பெற்றார்.

அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியை அ.தி.மு.க கூட்டணியில் சேர்க்க முயன்ற நிலையில், சீட் பிரச்னையால் கூட்டணியில் இடம்பெறாமல் தனித்து நின்றது தனிக்கதை. ஆனால், இந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் சேர எந்த இஸ்லாமியக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க-வோ, முஸ்லிம் லீக்கைத் தவிர மற்ற இஸ்லாமிய கட்சிகளைப் பொருட்படுத்தவில்லை.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

எப்படி பா.ஜ.க-வை கூட்டணியில் சேர்த்தால் சிறுபான்மையினரின் ஆதரவு விலகிப்போகிறதோ, அதுபோல் இஸ்லாமியக் கட்சிகளை அதிகம் இணைத்தால் பொதுவான இந்துக்கள் தி.மு.க-வைப் புறக்கணிக்கிறார்கள் என்று சர்வே குழு ஒன்று தி.மு.க தலைமைக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

அதற்கு பதிலாக தி.மு.க-விலுள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கினால் கட்சியினர் எந்த வேறுபாடும் இல்லாமல் தேர்தல் வேலை பார்ப்பார்கள். இஸ்லாமிய மக்களும் அதிக ஆதரவைத் தருவார்கள் என்று அறிவாலயம் திட்டமிடுகிறதாம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அது மட்டுமல்லாமல் கூட்டணி இஸ்லாமியக் கட்சிகளுக்கு சீட் வழங்கினால், அங்கு தி.மு.க-வினர் வேலை செய்ய சுணக்கம் காட்டுகிறார்கள். இது ஆளும்கட்சிக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும். அதனால், இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்பினால் கட்சியில் நீண்டகாலமாக இருக்கும் நிர்வாகிகளுக்கு வழங்கலாம் என்றும் சீனியர்கள் தரப்பிலிருந்து தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லப்பட்டதாம்.

மறைந்த கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சாதிக்பாட்சா மகன் முஸ்டாக் பாட்சா, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் உறவினர், முன்னாள் எம்.பி மறைந்த ராமநாதபுரம் எம்.ஏ.காதர் உறவினர், ஆயிரம் விளக்கு உசேன் குடும்பத்தினர், ஐடி விங் மாநில நிர்வாகி புதுக்கோட்டை அப்துல்லா, திண்டுக்கல் நூர்ஜஹான் பேகம் குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் தஞ்சை உபயதுல்லா உறவினர்கள், கீழக்கரை வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்கள் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தலைமையின் இந்த ரூட் மாற்றத்தால், கட்சியிலுள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் குஷியாகியிருக்கிறார்கள். இஸ்லாமிய கூட்டணிக் கட்சிகள்தான் கையைப் பிசைந்தபடி நிற்கின்றன.