Published:Updated:

திருச்சி: காய்ச்சல்... திடீர் மூச்சுத்திணறல்!-சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்புகிறார் துரைமுருகன்

சிகிச்சை முடிந்த பிறகு வெளியே வரும் துரைமுருகன்
சிகிச்சை முடிந்த பிறகு வெளியே வரும் துரைமுருகன்

இரண்டு நாள்களாக ஓய்வின்றி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் உடல்நிலையில் அசதி ஏற்பட்டது. அதன் காரணமாகவே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொண்டார்.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

துரைமுருகன்
துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுத் தலைவராக இருக்கிறார். அவரது தலைமையில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கணக்கு குழு ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் திருச்சி கட்டுமானப்பணி, மத்தியச் சிறை, வேளாண் கல்லூரி உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்துக்குப் பின்னர், துரைமுருகன் மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மாலை சென்னை செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால், திண்டுக்கல்லில் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது.

சிகிச்சை முடிந்த பிறகு வெளியே வரும் துரைமுருகன்
சிகிச்சை முடிந்த பிறகு வெளியே வரும் துரைமுருகன்

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவசர அவசரமாக திருச்சிக்கு அழைத்துவரப்பட்டார். திருச்சி மாருதி மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது. துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலறிந்த தி.மு.க-வினர் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

என்ன நடந்தது என்று துரைமுருகனோடு இருக்கும் தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். ``பொதுக்கணக்கு ஆய்வுக் குழு கூட்டத்துக்கு வந்தார். அங்கே வருவதற்கு முன்பே அவருக்கு விட்டு விட்டுக் காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தால் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திண்டுக்கல்லில் நடைப்பெற்ற கூட்டத்தை முடித்துவிட்டு கொடைக்கானல் அடிவாரத்திலுள்ள ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

மருத்துவருடன் காரில் செல்லும் துரைமுருகன்
மருத்துவருடன் காரில் செல்லும் துரைமுருகன்

அங்கு கடுமையக நிலவிய குளிரால் காய்ச்சல் அதிகமானது. காய்ச்சலை வைத்துக்கொண்டு இங்கு இருந்தால் சரியாக இருக்காது என்று திண்டுக்கல் டு திருச்சி வழியாக வந்து கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சி.டி ஸ்கேன் மற்றும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் நெகட்டிவ் என்று வந்தவுடன் ஊசி போட்டுக்கொண்டு சாலைவழியாகச் சென்னைக்குக் கிளம்பி விட்டார். அவர் கூடவே ஒரு மருத்துவரும் செல்கிறார்.அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்றனர்

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

துரைமுருகனின் உடல்நிலை குறித்து அவரது மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்திடம் கேட்டபோது, ``இரண்டு நாட்களாக ஓய்வின்றி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு உடல்நிலையில் அசதி ஏற்பட்டது. அதன் காரணமாகவே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொண்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் சென்னைக்குத் திரும்பியிருக்கிறார். பயப்படும்படி இல்லை’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு