Published:Updated:

``அதிமுக திட்டங்களைப் படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கையில் திமுக அரசு!” - ஓ.பன்னீர்செல்வம் வேதனை

ஓ.பி.எஸ் ( OPS )

``ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக் கூடாது என்பதற்காக செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.” - ஓ.பன்னீர்செல்வம்

``அதிமுக திட்டங்களைப் படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கையில் திமுக அரசு!” - ஓ.பன்னீர்செல்வம் வேதனை

``ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக் கூடாது என்பதற்காக செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.” - ஓ.பன்னீர்செல்வம்

Published:Updated:
ஓ.பி.எஸ் ( OPS )

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தியுள்ள திமுக அரசைக் கண்டித்து அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஏப்ரல் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

தேனி பழனிசெட்டிபட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ''பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அவற்றை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தட்டுத் தடுமாறுகிறது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதற்கு உண்டான நிர்வாகத்திறன் இல்லாத அரசாக திமுக-வினர் இருப்பார்கள் என மக்களிடம் எடுத்துக் கூறினோம்.‌ ஆனால் அதையும் மீறி திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வந்திருக்கும் ஒரு துர்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக் கூடாது என்பதற்காக ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக அரசால் ஆரம்பிக்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைப் படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டுவருகிறது. திமுக அரசை ஏன் கொண்டு வந்தோம் எனப் பொதுமக்கள் எண்ணும் அளவுக்கு இன்றைய ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மின் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.‌ ஆனால் இன்றைக்குத் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.‌ பாதி மின்சாரம்தான் கிடைக்கிறது.‌ மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் எந்தவித வரி உயர்வும் தமிழகத்தில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் தற்போது யாராலும் கட்ட முடியாத வகையில் 150 சதவிகித சொத்து வரியை உயர்த்தியுள்ளது.

ஓபிஎஸ்-சையது கான்
ஓபிஎஸ்-சையது கான்

இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் திமுக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுக்கிற ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டும். அதன் மூலமாக திமுக அரசு உயர்த்தியுள்ள 150 சதவிகித சொத்து வரி உயர்வு ரத்து செய்யப்பட வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism