Published:Updated:

`தேர்தல் நேரத்தில் கூட்டணி உடையலாம்!’ - துரைமுருகன் சூசகம்

துரைமுருகன்
துரைமுருகன்

``தேர்தல் நேரத்தில், கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியே போகலாம். புதிய கூட்டணியும் உருவாகலாம்’’ என்கிறார், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்.

வேலூர், காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளரும் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன் தலைமையில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துரைமுருகன், ``நாங்கள் நடத்தியது போட்டி கிராமசபை இல்லை. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாங்கள் ஏற்கெனவே தயாராக இருந்தோம். அவங்க திடீர்னு கேன்சல் பண்ணிட்டாங்க. இவ்ளோ பெரிய, காந்தி பிறந்தநாளில் நடக்கக்கூடிய கிராமசபையை ராத்திரி 9, 10 மணிக்கு மேல் எதுக்காக கேன்சல் பண்ணணும்?

துரைமுருகன்
துரைமுருகன்

நாங்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் சொன்னோம். அவங்க என்னடான்னா, `கொரோனா தொற்று அதிகமாகிடும்’னு காரணம் சொல்லி, கிராமசபையை நடத்தக் கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்க. முந்தின நாளே தெரியாதா? நேத்தைக்கு முழுக்க அமைதியா இருந்துட்டு, நைட் `ரத்து’னு அறிவிக்கிறாங்க. ஒரே நாடு, ஒரே ரேஷன் கடை, ஒரே பூமி, ஒரே மொழி, ஒரே அரசாங்கம் இவையெல்லாம் ஜனநாயகத்தை அடியோடு பெயர்த்து எறிகிற காரியங்களாகக் கருதுகிறேன்.

வேலூர்: `சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறை!’ -துரைமுருகன் ஆதரவாளர்கள் கலக்கம்

எந்த நாயகமாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது போய்ச் சேரணும். அப்படி நல்லது கிடைக்கலைன்னா, ஜனநாயகமாக இருந்தாலும், சர்வாதிகாரமாக இருந்தாலும் பிரயோஜனம் இல்லை’’ என்றவரிடம் ``பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி மீது உத்தரப்பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

துரைமுருகன்
துரைமுருகன்

அதற்கு துரைமுருகன், ``எங்களை மாதிரியான சின்ன ஆள் மேலயே வழக்கு போடும்போது, ராகுல்காந்தி மாதிரியான பெரிய ஆள் மேல வழக்கு போடாம இருப்பாங்களா? எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தேர்தல் காலத்தில், `சீட்’ பத்தலை, கேட்ட தொகுதி கிடைக்கலை போன்ற காரணங்களால் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் வெளியே போகலாம். வேறு கூட்டணியிலுள்ள கட்சிகளும் எங்களுடன் வந்து சேரலாம்’’ என்றார். கூட்டணி தொடர்பான இந்தக் கருத்தில், துரைமுருகன் பொடிவைத்துப் பேசியிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு