Published:Updated:

சொந்தக் கட்சியை எதிர்த்து போட்டி; அறிவாலயத்தில் என்ட்ரி மறுப்பு? - வைரலான ஆடியோ... மத்தீன் பதில்

மத்தீன்

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய மற்றும் தலைமைக் கழகம் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக நின்று வென்ற தி.மு.க நிர்வாகிகள் அறிவாலயத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொந்தக் கட்சியை எதிர்த்து போட்டி; அறிவாலயத்தில் என்ட்ரி மறுப்பு? - வைரலான ஆடியோ... மத்தீன் பதில்

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய மற்றும் தலைமைக் கழகம் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக நின்று வென்ற தி.மு.க நிர்வாகிகள் அறிவாலயத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
மத்தீன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெருவாரியான வெற்றியைப் பெற்றாலும், உட்கட்சி பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. கடந்த வாரம் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க-வினர் போட்டியாக நின்று வெற்றிபெற்றுள்ளனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

``கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில், வெற்றிபெற்று பதவியேற்றவர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதனடிப்படையில் ஆங்காங்கே சிலர் ராஜினாமா செய்தாலும், பலர் ராஜினாமா செய்ய முடியாது என்று மறுத்துவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுபக்கம், தி.மு.க தலைமை அறிவித்த தங்களது வேட்பாளர்களை எதிர்த்தே நிர்வாகிகள் வெற்றிபெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் வால்பாறை நகராட்சி, அன்னூர் பேரூராட்சி பகுதிகளில் தி.மு.க அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக, உள்ளூர் உடன்பிறப்புகள் போட்டியாக நின்றனர்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இது களேபரமாக மாற, கடைசியில் அங்கு தேர்தலை தள்ளிவைத்துவிட்டனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் வேட்பாளராக, தி.மு.க தலைமை ஜெயக்குமார் என்பவரை அறிவித்தது.

தி.மு.க இளைஞரணி அமைப்பாளரான ஜெயக்குமார், களத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதாலும், உதயநிதியுடனும் அவருக்கு நெருக்கம் என்பதாலும் வேட்பாளராக அறிவித்தனர். ஆனால், ஏற்கெனவே நகராட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த, தி.மு.க நகரச் செயலாளர் மத்தீன் இதில் அதிருப்தியடைந்தார்.

மத்தீன்
மத்தீன்

மறைமுகத் தேர்தலில் ஜெயக்குமாருக்கு எதிராக நின்று வெற்றியும் பெற்றார். இதனால், தலைமை மத்தீன் மீது கோபத்தில் இருக்கிறது. மத்தீன் மட்டுமல்லாமல், தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து வென்ற அனைவர் மீதும் கறார் காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், தலைமையைச் சமாதானப்படுத்த மத்தீனும் அவர் ஆதரவாளர்களும் அறிவலாயம் சென்றுள்ளனர். அங்கு, ``மத்தீன், அவரை முன்மொழிந்தவர்கள், வழிமொழிந்தவர்கள் இங்கு வந்திருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அவர்கள் யாரும் இங்கு வரக் கூடாது.

பூச்சி முருகன்
பூச்சி முருகன்

தோழமைக் கட்சி வேட்பாளர்கள், தலைமைக் கழகம் அறிவித்த நம் வேட்பாளர்களை எதிர்த்தவர்கள் யாரும் உள்ளே வரக் கூடாது. யாராவது வந்தால் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் உடனடியாகச் சொல்லுங்கள்” என்று தி.மு.க-வினர் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவரும் நிலையில், ``கூட்டணி தர்மத்தைப் பின்பற்றாதவர்கள் மற்றும் தலைமையின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வென்ற தி.மு.க நிர்வாகிகள் யாராக இருந்தாலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று ஸ்டாலின் கூறிவிட்டார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதனால்தான், வெளிப்படையாகவே அனுமதி இல்லை என்று அறிவாலயத்தில் தடை போடுகின்றனர்.” என்கின்றன தி.மு.க வட்டாரங்கள்.

இது குறித்து உடுமலை நகராட்சித் தலைவராகப் பதவியேற்றுள்ள மத்தீனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிபெற்ற அனைவரையும் தலைவர் இன்று சந்திப்பதாகக் கூறினார்கள். கடைசி நேரத்தில் அவரின் திட்டம் மாற்றப்பட்டுவிட்டது. அதனால், திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் வெற்றிபெற்றவர்களை இன்று சந்திக்க முடியவில்லை. நான் இப்போதுதான் சென்னை விமான நிலையம் வந்துள்ளேன். அந்த ஆடியோ போலியானதாக இருக்கும். தலைமை என்னை அப்படிச் சொல்லாது. கட்சிக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவன் நான். எனக்கு ஆதரவாக 25 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். என்னை எதிர்த்து நின்ற ஜெயக்குமாருக்கு எட்டுப் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருக்கும் உடுமலைப்பேட்டைக்கும் சம்பந்தமில்லை. அவர் பூளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். தலைமைக்குத் தவறான தகவல்களை சொல்லி வேட்பாளராகிவிட்டார்" என்றார்.

இது குறித்து தி.மு.க தலைமை நிலையச் செயலாளரும், வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகனைத் தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்...