Published:Updated:

திண்டுக்கல்: `தேன்மொழி என்றாலே தி.மு.க-வுக்கு பயம்!’ - நத்தம் விஸ்வநாதன் கிண்டல்

நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், நத்தம் விஸ்வநாதன் பேசியது, தி.மு.க-வினரை கொதிப்படையச் செய்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தேன்மொழி அறிவிக்கப்பட்டார். அ.தி.மு.க-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த தேன்மொழி, கடந்த வாரம் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். இந்தநிலையில், கூட்டணிக் கட்சியினரை அழைத்து, நிலக்கோட்டையிலுள்ள தனியார் மண்டபத்தில், வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளருமான நந்தம் விஸ்வநாதன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
திண்டுக்கல் : `என் கட்சிக்கு லீவு விட்டுட்டேன்!’ - நிலக்கோட்டை தி.மு.க கூட்டணி வேட்பாளர் பேச்சு

கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ``தேன்மொழி என்றாலே தி.மு.க-வுக்குத் தோல்வி பயம் வந்துவிடும். அதனால்தான், யாரும் கேள்விப்படாத ஒரு கட்சிக்கு நிலக்கோட்டைத் தொகுதியை ஸ்டாலின் ஒதுக்கியிருக்கிறார். தேன்மொழி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலைக்கு ஒரு நாள் ஓட்டுப் போட்டீர்கள் என்றால், ஐந்தாண்டுகளுக்கு சந்தோஷமாக வாழலாம்” என்றார்.

முருகவேல்ராஜன்
முருகவேல்ராஜன்

நிலக்கோட்டைத் தொகுதியில் தி.மு.க சார்பில், அதன் கூட்டணிக் கட்சியான, மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலத் தலைவர் முருகவேல் ராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில், நிலக்கோட்டை தொகுதியிலுள்ள தி.மு.க கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த முருகவேல் ராஜன், தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம், ``என் கட்சிக்கு லீவு விட்டுட்டேன். தி.மு.க வேட்பாளராகவே களமிறங்கி தேர்தலைச் சந்திப்பேன்” என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில், தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் பற்றி நத்தம் விஸ்வநாதன் கிண்டல் செய்திருப்பது, தி.மு.க நிர்வாகிகளை கொதிப்படையச் செய்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு