Published:Updated:

``அதிமுக-வின் பிளவுக்குப் பின்னணியில் திமுக இருக்கிறது!" - சசிகலா குற்றச்சாட்டு

சசிகலா

``அ.தி.மு.க பிளவு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க-வுக்கு தான் சாதகமான பயனைக் கொடுக்கும்." - சசிகலா

``அதிமுக-வின் பிளவுக்குப் பின்னணியில் திமுக இருக்கிறது!" - சசிகலா குற்றச்சாட்டு

``அ.தி.மு.க பிளவு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க-வுக்கு தான் சாதகமான பயனைக் கொடுக்கும்." - சசிகலா

Published:Updated:
சசிகலா

அ.தி.மு.க-வின் முதல் எம்.பி மாயத்தேவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தார். அவர் உடல் திண்டுக்கல் சின்னாளபட்டியிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அவர் உடலுக்கு வி.கே.சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி
அஞ்சலி

அப்போது பேசிய அவர், ``கடந்த 1973-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரால் திண்டுக்கல் தொகுதியில் நிறுத்தப்பட்டு சுயேச்சையாக இரட்டை இலையில் மகத்தான வெற்றியைப் பெற்றவர் மாயத்தேவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரட்டை இலை சின்னத்தைப்பெற்று தந்த மாயத்தேவர் மறைவு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. உடல்நலமில்லாத அவரை நான் கடந்த வாரம் நேரில் வந்து பார்த்துச் செல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த கொடுப்பினை எனக்கு இல்லாமல் போனது. அவர்கள் மறைந்ததும் உடனடியாக நேரில் வந்துவிட்டேன்.

சசிகலா
சசிகலா

அ.தி.மு.க-வின் முதல் வெற்றி என்பது சின்ன கிராமத்திலிருந்து வந்த மாயத்தேவரால் பெற்றுத் தரப்பட்டது. அதை என்றுமே அ.தி.மு.க மறக்காது... மறக்கவும் முடியாது.

அ.தி.மு.க என்பது தனிப்பட்ட நபருக்கானது அல்ல... எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போதே தொண்டர்களுக்காக ஆரம்பித்த கட்சி என்றுதான் சொல்லியிருந்தார். மக்களும் சரி அ.தி.மு.க தொண்டர்களும் சரி யார் பொதுச்செயலாளர் என்று நினைக்கிறார்களோ அவர்தான் பொதுச்செயலாளராக இருக்க முடியும். அ.தி.மு.க-வை பொறுத்தவரை தொண்டர்கள்தான் முடிவுசெய்வார்கள், தொண்டர்கள் என்னோடு இருக்கிறார்கள்.

சசிகலா
சசிகலா

நான் பெங்களூரிலிருந்து வந்ததிலிருந்து அ.தி.மு.க-விலிருந்து யார்... யார் பிரிந்து சென்றார்களோ, அவர்களெல்லாம் ஒன்றிணைந்து செல்லவேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன்.

நான் 40 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் இருக்கிறேன். எல்லா அரசியல் சூழ்நிலைகளையும் பார்த்துதான் வந்திருக்கிறேன்.

சசிகலா
சசிகலா

அ.தி.மு.க பிளவு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க-வுக்கு தான் சாதகமான பயனைக் கொடுக்கும். அதனால் அ.தி.மு.க பிளவுக்கு பின்னணியில் தி.முக இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். கட்சியிலிருந்து யார் யார் பிரிந்திருக்கிறார்களோ அவர்களையெல்லாம் ஒன்றிணைப்பதுதான் என்னுடைய வேலை. அவர்களையெல்லாம் நான் ஒன்றிணைப்பேன். 2024 -ல் ஆட்சியை அமைப்போம், அதை நோக்கித்தான் என்னுடைய பயணம் உள்ளது" என்றார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் வைத்தியநாதன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார்.