Published:Updated:

ஒன் பை டூ: ரூ.25,714 கோடி... வரி பாக்கியை வசூலிக்குமா தமிழக அரசு?

கண்ணதாசன், கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணதாசன், கரு.நாகராஜன்

பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல் இப்போதுவரை பல்வேறு திட்டங்களுக்காகத் தமிழ்நாட்டுக்கு 7.28 லட்சம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது.

ஒன் பை டூ: ரூ.25,714 கோடி... வரி பாக்கியை வசூலிக்குமா தமிழக அரசு?

பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல் இப்போதுவரை பல்வேறு திட்டங்களுக்காகத் தமிழ்நாட்டுக்கு 7.28 லட்சம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது.

Published:Updated:
கண்ணதாசன், கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணதாசன், கரு.நாகராஜன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு ஜி.எஸ்.டி வரி பாக்கி 16,725 கோடி ரூபாய், தேசிய, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி 8,989 கோடி ரூபாய் என மொத்தம் 25,714 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வரவேண்டியிருக்கிறது” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் 18-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், இந்தத் தொகையை எப்படி வசூலிக்கப்போகிறது மாநில அரசு? எப்போது கொடுக்கப்போகிறது மத்திய அரசு?

கண்ணதாசன், வழக்கறிஞர், தி.மு.க.

“மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டிய ஜி.எஸ்.டி தொகையை நிறுத்திவைப்போம். அப்படிச் செய்தாலே அவர்கள் தாங்களாக நம் வழிக்கு வந்துவிடுவார்கள். அதன் பிறகும் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு இழுத்தடித்தால், நீதிமன்றம் சென்று கேட்டுப் பெறுவோம். அதற்கு அரசியலமைப்புச் சட்டத்திலேயே வழிகள் இருக்கின்றன. பா.ஜ.க ஒன்றிய அரசு, இந்தியாவை ஒருமைப்பாடு உடைய ஒரு நாடாக... இந்திய மக்களுக்கான நாடாகப் பார்க்காமல், தங்கள் சொந்த உடைமையாகப் பார்க்கிறது. அதனால்தான் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசுவதையெல்லாம், ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசுவதாக எடுத்துக்கொள்கிறது. ஆனால், தி.மு.க ஒருபோதும் ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசியதில்லை; பா.ஜ.க என்கிற கட்சிக்கு எதிராகத்தான் பேசிவருகிறது. இந்தப் புரிதல் அவர்களுக்கு இல்லை. மத்திய அரசிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிப்போம்... குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்துவோம்!”

ஒன் பை டூ: ரூ.25,714 கோடி... வரி பாக்கியை வசூலிக்குமா தமிழக அரசு?
ஒன் பை டூ: ரூ.25,714 கோடி... வரி பாக்கியை வசூலிக்குமா தமிழக அரசு?

கரு.நாகராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் பா.ஜ.க.

“பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல் இப்போதுவரை பல்வேறு திட்டங்களுக்காகத் தமிழ்நாட்டுக்கு 7.28 லட்சம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது. ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையையும் அவ்வப்போது வழங்கிக்கொண்டு தான் இருக்கிறது. சந்தர்ப்ப சூழல்களால் தாமதம் ஏற்பட்டால், குறைவான வட்டியில் கடனும் வழங்கிவருகிறது. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடமிருந்து நிலுவைத் தொகை வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்வதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அந்தத் தொகை எப்போது, எந்தெந்தக் காலகட்டங்களில் வழங்கப்பட வேண்டுமோ அந்தந்தக் காலகட்டங்களில் கட்டாயம் வழங்கப் படும். வரும் நிதியாண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த 1.18 லட்சம் கோடி ரூபாயும், மெட்ரோ திட்டங்களுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இவ்வளவு செய்து கொண்டிருக்கும்போது வெறும் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையை மக்களிடம் சொல்லி வாக்கு அரசியலில் தி.மு.க ஈடுபடுவது மிகப்பெரிய தவறு. மத்திய அரசுமீது குற்றம்சாட்ட தி.மு.க அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism