Published:Updated:

மேயர் தேர்வு: யார் பாணியைப் பின்பற்றினார் ஸ்டாலின்?!

ஸ்டாலின்

` ``தலைவர் கலைஞர் பாணி வேறு... என் பாணி வேறு" என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைப்பிடித்துவருகிறார்' என்கிறார்கள்.

மேயர் தேர்வு: யார் பாணியைப் பின்பற்றினார் ஸ்டாலின்?!

` ``தலைவர் கலைஞர் பாணி வேறு... என் பாணி வேறு" என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைப்பிடித்துவருகிறார்' என்கிறார்கள்.

Published:Updated:
ஸ்டாலின்

``தலைவர் கலைஞர் பாணி வேறு... என் பாணி வேறு" என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைப்பிடித்துவருகிறார். ஒன்பது மாதகால ஆட்சியில் அவ்வளவாக கருணாநிதி சாயல் எங்குமே தென்படவில்லை. மாறாக, ஸ்டாலினுக்கு சமீபகாலமாக ஜெயலலிதா சாயல் தென்படத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் சிலர்.

ஸ்டாலின் - ஜெயலலிதா
ஸ்டாலின் - ஜெயலலிதா

அரசியல் பார்வையாளர் ஒருவர் இது பற்றி நம்மிடம் விளக்கமாகப் பேசுகையில், ``ஜெயலலிதாவின் பாணி எப்போதுமே அதிகாரம் என்பது ஒற்றை இடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதுதான். 32 அமைச்சர்கள் இருந்தபோதும், எவரையுமே முழுமையாகச் செயல்படவிடாமல் அதிகாரத்தைத் தன் கையிலேயே வைத்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே போன்றுதான் தற்போதும் மொத்த அதிகாரத்தையும் தன் கைகளில் மட்டுமே வைத்திருக்கிறார் ஸ்டாலின். அமைச்சர்களிடம் எதைப் பற்றிக் கேட்டாலும், `முதல்வர்தான் அறிவிப்பார், முதல்வரின் முடிவே இறுதியானது’ என்ற பதில்கள்தான் வருகின்றன.

புனித ஜார்ஜ் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை

ஜெயலலிதா பெரும்பாலும் பேசும்போது, `எனது தலைமையிலான அரசு’ என்றே சொல்வதுண்டு. முதல்வர் ஸ்டாலின் பொதுவாக அப்படிச் சொல்லவில்லையென்றாலும், சில இடங்களில் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அமைச்சர்களைவிட அதிகாரிகளை நம்பித்தான் ஆட்சி செய்வார் ஜெயலலிதா. அதே பாணியில்தான் ஸ்டாலினும் அதிகாரிகளைக்கொண்டே செயல்படுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிபாரிசு கேட்டெல்லாம் ஜெயலலிதாவிடம் நிற்க முடியாது. அது போன்றுதான் ஸ்டாலின் இடத்திலும் நடப்பதாக தி.மு.க-வினரே குமுறுகிறார்கள். வெளியில் தெரியும் அளவுக்குத் தவறு செய்யும் அமைச்சர்களை அடிக்கடி கழற்றிவிட்டு, அமைச்சரவையை மாற்றிக்கொண்டேயிருப்பது ஜெ பாணி. ஸ்டாலினும், அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார். அநேகமாக பட்ஜெட் கூட்டத்தொடரும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் முடிந்த பின்னர் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம்.

ஸ்டாலின் - சட்டமன்றம்
ஸ்டாலின் - சட்டமன்றம்

சில விவகாரங்களில் ஜெயலலிதா பாணியையும் மிஞ்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதுதான் தேர்தல் களம். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஐபேக்கிடமிருந்தும், மா.செ-க்களிடமிருந்தும் வேட்பாளர் பட்டியலைப் பெற்றுக்கொண்டு, தனியாக அமர்ந்து ஸ்டாலின்தான் தேர்வு செய்து வெளியிட்டார். ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் லோக்கல் பதவிகளை மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களே கவனித்துக்கொள்ள அனுமதித்த ஸ்டாலின், `மேயர் பதவிகளை மட்டும், நான்தான் தேர்வு செய்வேன்’ என்று கூறிவிட்டாராம். அதன்படி ஸ்டாலின் மட்டுமே இருந்து தேர்வுசெய்த பட்டியல்தான் வெளியானது. மொத்தத்தில் ஸ்டாலின் அவர் தந்தை கருணாநிதியின் பாணியிலோ அல்லது ஜெயலலிதா பாணியிலோ செயல்படாமல், தனக்கே உரித்தான சொந்த பாணியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism