Election bannerElection banner
Published:Updated:

`சசிகலா பார்த்துப்பாங்க...’ - உற்சாக ஸ்டாலின்

ஸ்டாலின், சசிகலா
ஸ்டாலின், சசிகலா

சசிகலாவின் வருகையால் அவருடசிய ஆதரவாளர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்களோ இல்லையோ, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் படு குஷியில் இருக்கிறாராம்.

கொரோனா சிகிச்சை முடிந்து, பெங்களூரிலுள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் ஓய்விலிருக்கிறார் சசிகலா. பிப்ரவரி 8-ம் தேதி அவர் சென்னை வரும்போது, அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கவும் அவருடைய ஆதரவாளர்கள் மும்முரமாகிறார்கள். இந்தச் சூழலில், சசிகலாவின் வருகை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாகமூட்டியிருப்பதாகக் கூறுகிறது தி.மு.க வட்டாரம்.

சசிகலா
சசிகலா

இது குறித்து தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ``சசிகலாவால் அ.தி.மு.க-வின் வாக்குகள் டெல்டாவிலும், தென் மாவட்டங்களிலும் சிதறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது ஸ்டாலினை உற்சாகப்படுத்தியிருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த தென்மாவட்ட எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், சீனியர்கள் சிலர் சமீபத்தில் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தனர். அப்போது, கட்சியின் தேர்தல் வியூகம் குறித்துப் பேசப்பட்டது.

திருச்சி:`ஸ்டாலின் முதல்வரானால்தான் ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும்!’ - ஆர்.எஸ்.பாரதி

ஸ்டாலினிடம் தென்மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர், `தலைவரே, தொகுதிவாரியாக நீங்கள் போடுற `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப் பயணம் மக்கள்கிட்ட பெரிய வரவேற்பை பெற்றிருக்கு. அ.தி.மு.க ஆட்சி மேலே பயங்கர கோபத்துல இருக்காங்க. இதே நிலைமை நீடிச்சுதுன்னா, 200 தொகுதியில நாம வெற்றி பெற்றிடுவோம்னு நினைக்கிறேன்’ என்றிருக்கிறார். அதற்கு ஸ்டாலின்,`200 தொகுதி இல்லை... 234 தொகுதியிலேயேயும் நாமதான் வெற்றிபெறப் போறோம். எல்லாத்தையும் சசிகலா பார்த்துப்பாங்க. சசிகலாவால பிரியப்போற அ.தி.மு.க வாக்குகள் அந்தக் கட்சிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போகுது. ஏற்கெனவே ஏகப்பட்ட குழப்பம் அ.தி.மு.க-வுல உதயமாகிடுச்சு. இனி, அது இன்னும் பெரிசாகும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் Vs எடப்பாடினு போய்க்கிட்டு இருந்த பிரசாரம், இப்போ சசிகலா Vs எடப்பாடினு மாறிடுச்சு பார்த்தீங்களா... அவங்க உட்கட்சி பிரச்னையைச் சமாளிக்குறதுக்கே எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் சரியாக இருக்கும். இதுல அவர் எங்கேயிருந்து பிரசாரம் செய்யப்போறாரு... தென் மாவட்டங்களிலும், டெல்டாவிலும் தி.மு.க `ஸ்வீப்’ பண்ணிடும். நாம அமைதியா ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பார்ப்போம். பூத் கமிட்டிகளை `ஸ்ட்ராங்’ பண்ற வேலையை மட்டும் நீங்க பாருங்க’ என்றிருக்கிறார். ஸ்டாலினின் இந்தத் தெம்பூட்டும் பேச்சு கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்களையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது” என்றனர்.

``சசிகலா அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன்!'' - நாஞ்சில் சம்பத் பிடிவாதம்

தி.மு.க-வில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. பேச்சுவார்த்தை முடிவடையும் வரை தாமதப்படுத்தாமல், தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து, இந்த மாத இறுதியிலேயே விருப்ப மனுக்களை வாங்க அறிவாலயம் திட்டமிட்டிருக்கிறதாம்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

மார்ச் இரண்டாவது வாரத்தில் விருப்ப மனுக்களை பரிசீலித்து, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்களாம். மார்ச் இறுதிக்குள் வேட்பாளர்களை முன்னிறுத்தி பிரசாரத்தை விரைவுப்படுத்தத் தயாராகிறது தி.மு.க. சசிகலாவின் வருகை தெம்பூட்டியிருப்பதால், தேர்தல் வேலையை ஜரூராக டாப் கியரில் கொண்டு போக ஆரம்பித்துவிட்டது அறிவாலயம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு