Published:Updated:

``நாற்பதும் நமதே; நாடும் நமதே" - ஸ்டாலின் வியூக பின்னணி

ஸ்டாலின்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சிக்குள் எழுந்திருக்கும் மனமாச்சரியங்களைச் சரிகட்டிவிட முயல்கிறார் முதல்வர்

``நாற்பதும் நமதே; நாடும் நமதே" - ஸ்டாலின் வியூக பின்னணி

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சிக்குள் எழுந்திருக்கும் மனமாச்சரியங்களைச் சரிகட்டிவிட முயல்கிறார் முதல்வர்

Published:Updated:
ஸ்டாலின்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை, விருதுநகர் முப்பெரும் விழாவில் தொடங்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின். 'நாற்பதும் நமதே; நாடும் நமதே' என அறைகூவல் விடுத்து, கட்சித் தொண்டர்களைக் களப்பணியாற்ற அழைப்புவிடுத்திருக்கிறார். தேர்தல் நெருங்கிவிட்டால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் விடுக்கும் வழக்கமான அழைப்புதான் இது என்றாலும், தி.மு.க தலைவரின் இந்த அழைப்பு கட்சித் தொண்டர்களிடையே பேசுப் பொருளாகியிருக்கிறது. "நாடாளுமன்றத் தேர்தலுக்காக என்ன வியூகம் வகுத்திருக்கிறார் ஸ்டாலின்?", முப்பெரும் விழாவை முடித்துவிட்டு வந்திருக்கும் சீனியர் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம்.

விருதுநகர் முப்பெரும் விழா
விருதுநகர் முப்பெரும் விழா

"ஆட்சி, கட்சி இரண்டையும் ஒருசேர தேர்தல் பணிக்கு களமிறக்குவதுதான் முதல்வர் ஸ்டாலினின் வியூகம். அதன் தொடக்கமாகத்தான், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இனி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்புது திட்டங்களைத் தொடங்கி வைக்கவிருக்கிறார் முதல்வர். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், மின்சாரத்துறை தொடர்பாக நிலுவையிலிருக்கும் பிரச்னைகளை பட்டியலிடச் சொல்லியிருக்கிறார். இதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் 'நோடல் ஆபிஸர்'கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ-க்களிடம் கருத்து கேட்டு வருகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தலா ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடக்கிறது. போலி பத்திரங்களை சார் பதிவாளர்களே ரத்து செய்வதற்கான அதிகாரம் விரைவில் சட்டப்பூர்வமாக வழங்கப்படவிருக்கிறது. இப்படி, மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய, அவர்களோடு தினமும் தொடர்பில் இருக்கக்கூடிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் முதல்வர். இந்தத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாக, தி.மு.க அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதை மக்களிடம் உணர்த்த முடியும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்மீது கட்சித் தொண்டர்களுக்கு வருத்தம் இருந்தது உண்மைதான். தொண்டர்களை அவர் சரிவர பார்ப்பதில்லை, குறைகளை நிவர்த்தி செய்வதில்லை எனப் பல்வேறு புகார்கள் எழுந்தன. கட்சியின் அமைப்புத் தேர்தல்களில்கூட, ஒன்றிய, பகுதி அளவில் பெரும் பிரச்னைகள் வெடித்தது. அதையெல்லாம், 'ஒரு கட்சித் தலைவனாக ஸ்டாலின் அணுகவில்லை' என்கிற வருத்தம் இருந்தது. அதைப் போக்குவிதமாகத்தான், முப்பெரும் விழாவில், 'தொண்டர்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. அவர்களால்தான் இந்த ஆட்சியே இருக்கிறது' என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. அந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கச் சொல்லி, ஆளுநர் மாளிகைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது அரசு. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால், விரைவிலேயே கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும். அப்போது, அதிருப்தியிலிருக்கும் கட்சிக்காரர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பதவிகள் வழங்கப்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சிக்குள் எழுந்திருக்கும் மனமாச்சரியங்களைச் சரிகட்டிவிட முயல்கிறார் முதல்வர்" என்றவர்களிடம், கூட்டணி வியூகம் தொடர்பாகப் பேசினோம்.

முப்பெரும் விழா
முப்பெரும் விழா

"காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், த.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் இருக்கும் கூட்டணி அப்படியே தொடரும். தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு ஒதுக்கும் சீட்டுகளின் எண்ணிக்கையில் சில மாறுதல்கள் இருக்குமென எதிர்பார்க்கிறோம். கூட்டணி தொடர்பான விவகாரங்களையெல்லாம், அவருக்கு நெருக்கம்னாவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர். பா.ஜ.க எதிர்ப்பில் தி.மு.க தீவிரமாக இருப்பதாலும், கட்சிக்காரர்களை சரிகட்ட முதல்வர் முடிவெடுத்துவிட்டதாலும், புதுச்சேரியையும் சேர்த்து நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகள் தி.மு.க வசமாகத்தான் போகிறது" என்றனர் விரிவாக.

விருதுநகரில் முதல்வர் தொடங்கி வைத்திருக்கும் பிரசாரத் திட்டம், 40 சீட்டுகளையும் தி.மு.க-வுக்கு வென்று தருமா? என்பது, முதல்வரின் அடுத்தடுத்த நகர்வுகள், எதிர்க்கட்சிகளின் வியூகங்களைப் பொறுத்து தெரிந்துவிடும்.