Published:Updated:

தான் கொடுத்த தங்க பேனாவில் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திடுவாரா? - காத்திருக்கும் தொண்டர்!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் வெற்றியை பெற்று வருகின்ற 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், அன்று தான் வழங்கிய தங்க பேனாவில் கையொப்பமிடுவாரா என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் சையதுஜி.

முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின், எந்த வாக்குறுதிக்கான உத்தரவில் முதல் கையெழுத்திடுவார் என்று பலரும் பலவித கருத்துகளைக் கூறிவரும் நிலையில், அது எதுவாக இருந்தாலும் முதல் கையெழுத்து தான் வழங்கிய தங்கப் பேனாவில்தான் இட வேண்டும் என்று ஆர்வமாகக் காத்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மதுரை தெற்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளராக உள்ள சையதுஜி என்பவர் கலைஞர், மு.க.ஸ்டாலின் மீது தீவிர பற்றுகொண்டவர்.

நம்மிடம் பேசும்போது, ``தேர்தலுக்கு முன்பு அறிவாலயத்தில் நடந்த நேர்காணலுக்குச் சென்றேன். அப்போது தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தங்க முலாம் பூசப்பட்ட பேனாவைப் பரிசாக வழங்கினேன். எதற்கு என்று என்னிட்டம் கேட்டார். நீங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்போது இந்த பேனாவால்தான் முதல் கையொப்பமிட வேண்டும் என்று கோரிக்கைவைத்தேன்.

சையதுஜி வழங்கிய தங்க பேனா
சையதுஜி வழங்கிய தங்க பேனா

சிரித்துக்கொண்டே பேனாவைப் பெற்றுக்கொண்டார். அப்போது அவர் எந்த பதிலும் கூறவில்லை. நான் சென்னை சென்று நேர்காணலில் கலந்துகொண்டதே சீட் பெற அல்ல, தலைவரைச் சந்தித்து பேனாவை வழங்கத்தான்" என்றார்.

இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் வெற்றியைப் பெற்று, வருகின்ற 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், அன்று தான் வழங்கிய தங்க பேனாவில் கையொப்பமிடுவாரா என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் சையதுஜி.

சையதுஜி
சையதுஜி

`` இது ஒரு தொண்டனின் ஆசைதான். ஒருவேளை நான் கொடுத்த பேனாவை தலைவர் அவர்கள் நினைவில் வைத்திருந்து, அந்த பேனாவைக் கொண்டு முதல் கையெழுத்து போட்டால், அதைவிட மகிழ்ச்சி வேறொன்றுமில்லை. அவர் பதவி ஏற்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு