Published:Updated:

``மொய் விருந்தின் அடிப்படைகூட அண்ணாமலைக்கு தெரியவில்லை” - திமுக எம்.எல்.ஏ காட்டம்

மொய் விருந்து நடத்திய தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார் ( ம.அரவிந்த் )

``பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மொய் விருந்தில் கறுப்பு பணம் வெள்ளையாகியிருப்பதாக அறியாமையில் கூறியிருக்கிறார். அவர் கட்சியை சார்ந்த நிர்வாகிகளிடம் விசாரித்து கேட்டு தெரிந்திருக்கலாம்” - தி.மு.க. எம்.எல்.ஏ அசோக்குமார்.

``மொய் விருந்தின் அடிப்படைகூட அண்ணாமலைக்கு தெரியவில்லை” - திமுக எம்.எல்.ஏ காட்டம்

``பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மொய் விருந்தில் கறுப்பு பணம் வெள்ளையாகியிருப்பதாக அறியாமையில் கூறியிருக்கிறார். அவர் கட்சியை சார்ந்த நிர்வாகிகளிடம் விசாரித்து கேட்டு தெரிந்திருக்கலாம்” - தி.மு.க. எம்.எல்.ஏ அசோக்குமார்.

Published:Updated:
மொய் விருந்து நடத்திய தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார் ( ம.அரவிந்த் )

பேராவூரணி தொகுதி திமுக எம்.எல்.ஏ அசோக்குமார் நடத்திய மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூலானது அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மொய் விருந்து மூலம் கறுப்பு பணம் வெள்ளையாகியிருப்பதாக அறிக்கை வெளியிட்டது சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

அண்ணாமலை| பா.ஜ.க
அண்ணாமலை| பா.ஜ.க

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி சுற்று வட்டாரத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்து நடத்தப்பட்டு வருகிறது. திருமணம், புது வீடு கட்டுதல், தொழில் முதலீடு போன்ற பெரிய அளவில் பணத்தேவை ஏற்படும் போது மொய் விருந்து நடத்தி அதனை நிறைவேற்றி கொள்ளக்கூடிய பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுப நிகழ்ச்சிகளில் செய்யப்பட்ட மொய் நடைமுறை நாளடைவில் மொய் விருந்து விழா என்ற பெயரிலேயே நடத்த ஆரம்பித்தனர். வாழ்வில் பின்தங்கியவர்கள் முன்னேற்றம் அடைவதற்காக மொய் விருந்து நடத்துவர். அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் எல பருக்கும் கொடுப்பார்கள். மொய் விருந்து நாளில் கிடா வெட்டி மணக்க ருசிக்க அசைவ விருந்து வைப்பார்கள். அதனை சாப்பிட்ட பிறகு தங்களால் முடிந்த பணத்தை மொய் நோட்டில் விருந்தினர்கள் எழுதி செல்வர்.

தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து
தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து

வசூலான மொய் பணத்தின் மூலம் வருமானம் வரக்கூடிய தொழிலில் முதலீடு செய்வார்கள். பணம் செலுத்தியவர்கள் மொய் விருந்து நடத்தும் போது பணம் பிடித்தவர்கள் ஏற்கெனவே அவர் செலுத்திய பணத்துடன் புது நடை என்ற பெயரில் கூடுதலாக சேர்த்து எழுதுவர். ஒருவர் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்துவது வழக்கம். வட்டியில்லா கடன் என்கிற அடிப்படையில் மொய் விருந்து நடத்தப்படுகிறது.

இந்த மொய் விருந்து நடைமுறை அப்பகுதியின் கலாசாரமாகவே மாறியிருக்கிறது. இந்த நிலையில் பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார் கடந்த 23ம் தேதி பேராவூரணியில் மொய் விருந்து நடத்தினார். திருமண மண்டபம் ஒன்றில் பிரமாண்ட பந்தல் அமைத்து விமர்சையான ஏற்பாட்டை செய்திருந்தார்.

மொய் விருந்தில் வசூலான பணம்
மொய் விருந்தில் வசூலான பணம்

100 கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு விருந்து வைத்தார். மொய் பணம் வாங்குவதற்காக ஐந்து பேர் அடங்கிய குழு வீதம் மொய் எழுத, பணத்தை வாங்கி மொய் சட்டியில் வைக்க என 25 குழுக்கள் அமைப்பட்டிருந்தது. பணம் எண்ணுவதற்கு 25க்கும் மேற்பட்ட மிஷின் பயன்படுத்தப்பட்டது. கண்காணிப்பிற்கு 10க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

காலை முதலே விழாவுக்கு வந்தவங்க விருந்து சாபிட்டுவிட்டு மொய் எழுதி சென்றனர். மொய் விருந்தில் மொத்தம் ரூ. 10 கோடி வசூலாகியிருந்தது பலரையும் ஆச்சர்யமடைய செய்தது. மொய் விருந்து வரலாற்றிலேயே முதல் முறையாக 10 கோடி வசூலாகியிருப்பதாக பேராவூரணி பகுதியில் பலரும் பேசி வந்தனர். எம்.எல்.ஏ அசோக்குமாரும் உற்சாகமாக காணப்பட்டார்.

பேராவூரணி மொய் விருந்து
பேராவூரணி மொய் விருந்து

இந்த நிலையில் பா.ஜ.கவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ``வாழ்வதற்கு வழியில்லாமல் பணமுடையில் சிக்கி தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்வில் மீண்டு வர கடைசி வாய்ப்பாக பொய் விருந்து நடத்துவது வழக்கம். அதனை தி.மு.க எம்.எல்.ஏ தன் சுயலாபத்திற்கு பயன்படுத்தியுள்ளார். பணம் எண்ணுவதற்கு இயந்திரம், கட்டு கட்டாக சேர்ந்த பணத்தை உடனடியாக வங்கி கணக்கில் சேர்க்க வங்கி அதிகாரிகள் என குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் விருந்து மையத்தை நடத்தியுள்ளார்.

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய் அடித்து விட்டார். தி.மு.கவின் விஞ்ஞான ஊழல் திறமை, தலைமையே விஞ்சக்கூடிய வித்தை காட்டியிருக்கிறார் அசோக்குமார் ”எனவும் அறிக்கை வெளியிட்டார். அரசியல் ஆதாயத்திற்காக எங்களோட கலாசாரங்களில் ஒன்றான மொய் விருந்தை அண்ணாமலை தவறாக விமர்சித்திருப்பதாக பேராவூரணியில் குரல்கள் எழத்தொடங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம்
பணம்

இது குறித்து அசோக்குமார் எம்.எல்.ஏ-விடம் பேசினோம், ``ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே எங்க பகுதியில மொய் விருந்து கலாசாரம் இருந்து வருகிறது. 50 பைசாவில் வசூலாக தொடங்கியது இன்றைக்கு கோடிகளில் வசூலாகும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. வட்டியில்லா கடனாக மொய் விருந்தில் பணம் எழுதி செல்வார்கள். அவர்கள் தேவை நடத்தும் போது அதனை திரும்ப செலுத்த வேண்டும்.

ஒளிவு மறைவில்லாமல் எல்லாமே ஓப்பனாகத்தான் நடக்கும். வசூலான பணத்தை வாங்கிய கடனுக்கு அன்னைக்கு சாயங்காலமே பட்டுவாடா செய்திடுவோம். பேராவூரணி, அறந்தாங்கி, ஆலங்குடி மூன்று தொகுதிகளில் மொய் தேவை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மொய் விருந்தின் அடிப்படை தெரியவில்லை என்பது அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெளிவாக தெரிகிறது.

எம்.எல்.ஏ அசோக்குமார்
எம்.எல்.ஏ அசோக்குமார்

கறுப்பு பணம் வெள்ளையாகியிருப்பதாக அறியாமையில் கூறியிருக்கிறார். அவர் கட்சியை சார்ந்த நிர்வாகிகளிடம் விசாரித்து கேட்டு தெரிந்திருக்கலாம். சொந்தபந்தங்கள், நண்பர்கள் என பத்தாயிரம் பேர் மொய் செய்துள்ளனர். கூலி வேலை செய்றவங்க தொடங்கி கோடீஸ்வரர் வரை மொய் விருந்து நடத்துறாங்க. இது சுழற்சி முறையில் கொடுக்கப்படும் வட்டியில்லா கடன் அதனை திரும்ப செலுத்திடுவோம். மொய் விருந்தின் வரலாற்றை அண்ணாமலை தெளிவாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்” என்றார்.