Published:Updated:

`தி.மு.க-வில் ஸ்டாலின்; அ.தி.மு.க-வில் யார் முதல்வர் வேட்பாளர்னு சொல்ல முடியுமா?'-செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

`வரும் 2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தி.மு.க 234 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பார்' என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

``கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும், குறைந்தபட்சம் தலா 50,000 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறும். அ.தி.மு.க-வினர் அப்படிச் சவால்விடத் தயாரா?" என்று தி.மு.க அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தி.மு.க நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
தி.மு.க நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், `எல்லோரும் நம்முடன்... தி.மு.க-வில் இணையுங்கள்’ என்ற பெயரில், உறுப்பினர் சேகர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

500 மரக்கன்றுகள், 1000 பனை விதைகள்... வறட்சி கிராமத்தை `பசுமை'யாக்கும் கரூர் இளைஞர்கள்!

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க-வின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ முன்னிலையில், பலர் இணையவழியே தி.மு.க உறுப்பபினராகத் தங்களை இணைத்துக்கொண்டனர். செந்தில் பாலாஜி, அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

தி.மு.க நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
தி.மு.க நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது, ``கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 10,000 பேர் வீதம் 40,000 பேரை, தி.மு.க-வில் உறுப்பினராக்கத் திட்டமிட்டிருக்கிறோம். கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தலா 50,000 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறும். அப்படி, அ.தி.மு.க-வினர் சவால்விடத் தயாராக இருக்கிறார்களா... ஆனால், ஏற்கெனவே அரவக்குறிச்சி தேர்தலில் இப்படி சவால்விட்டு என்னிடம் அ.தி.மு.க-வினர் மண்ணைக் கவ்வியதால், அப்படி சவால்விட திராணியிருக்காது.

அதேபோல், தி.மு.க-வில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர். அப்படி வெளிப்படையாக அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் யார் எனக் கூற முடியுமா? அ.தி.மு.க-வில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஆனால், தி.மு.க-வில் தளபதி மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்பது உறுதி செய்யப்பட்டு, கூட்டணிக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க நிகழ்ச்சி
தி.மு.க நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

வரும் 2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தி.மு.க 234 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பார். இது நிச்சயம்’’ என்று அழுத்தமாகச் சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு