Published:Updated:

அரசிடம் `அனுமதி' வாங்கிய வட மாவட்டப் பிரமுகர்... அதிருப்தியில் தி.மு.க தலைமை!

தி.மு.க தலைமை
தி.மு.க தலைமை

இவர் நமக்கே தெரியாமல் டீல் போட்டு அனுமதி வாங்கிவிட்டாரே...' என கஜானா பிரமுகர்மீது தி.மு.க தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்

"காவல்துறையில் புலம்பல்கள் அதிகரித்துள்ளனவே?"

"ஆமாம். மாம்பலம் காவல் ஆய்வாளர் மரணத்துக்குப் பிறகு காவல்துறையினர் பலரும் பீதியில் இருக்கிறார்களாம். குறிப்பாக, செக்யூரிட்டி பிராஞ்ச்சில் கீழ்நிலைப் பதவிகளில் இருக்கும் பலரும் அச்சத்தில் புலம்புகிறார்கள்.

'ஐம்பது வயதைத் தாண்டிய எங்களை 18 மணி நேரம் டூட்டியில் போடுவது என்ன நியாயம்?' என்று குமுறுகிறார்கள். அதேசமயம், 'பாதுகாப்புத்துறையில் அமைச்சர்களுக்கு பி.எஸ்.ஓ-க்களாக இருக்கும் பலரும் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் தொடர்கிறார்கள். அமைச்சர்கள் பெயரைச் சொல்லி, கீழேயிருக்கும் பணியாளர்களை வதைக்கிறார்கள்.

குறிப்பாக, பத்து ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்கள் ஒரே இடத்தில் இருந்துகொண்டு எங்களுக்கு வழிவிட மறுக்கிறார்கள்' என்றெல்லாம் குமுறல் எழுந்துள்ளது!"

"பாவம்தான்!"

"தி.மு.க குடும்பத்தின் கஜானாவாக இருக்கும் வட மாவட்டப் பிரமுகர் ஒருவர் தனது மருத்துவக் கல்லூரிக்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இப்போது ஆட்சி மேலிடத்திடமே பேசி கமுக்கமாக அனுமதி வாங்கிவிட்டாராம்.

'கொரோனா ஊழல் என நாம் ஒருபக்கம் அரசைக் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க... இவர் நமக்கே தெரியாமல் டீல் போட்டு அனுமதி வாங்கிவிட்டாரே...' என கஜானா பிரமுகர்மீது தி.மு.க தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்" என்றபடி, டீயை உறிஞ்சினார் கழுகார்.

"அடேங்கப்பா!"

"தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்மீதும் உள்ள ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் திரட்டும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

மிஸ்டர் கழுகு: முதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்... உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்... - கழகங்களில் தொடரும் முட்டல் மோதல்! https://bit.ly/2UZjZ5q

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககத்துக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கவும் சொல்லியுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தால், இந்தப் புகார்களையெல்லாம் கையிலெடுத்து அமைச்சர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளார்கள்."

- "அ.தி.மு.க-வில் பதவிப் பஞ்சாயத்து களைகட்டுகிறதே?" என்று கேட்க, "ஆமாம். அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வருடன் முட்டிக் கொள்ளும் அளவுக்கு விவகாரம் சென்றுவிட்டது" என்று கடலையைக் கொறித்தபடி செய்திகளுக்குள் தாவினார்.

அரசிடம் `அனுமதி' வாங்கிய வட மாவட்டப் பிரமுகர்... அதிருப்தியில் தி.மு.க தலைமை!

"தி.மு.க-விலும் மாவட்டச் செயலாளர் பதவி ஒன்றைப் பூர்த்தி செய்வதில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றனவே..?", "உதயநிதி ட்விட் ஒன்றை பதிவிட்டிருப்பதைத் தொடர்ந்து ஆ.ராசா ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் போலிருக்கிறது?"

அடுக்கடுக்கான கேள்விகளுக்கு கழுகார் தந்த விரிவான தகவல்களை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க > மிஸ்டர் கழுகு: முதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்... உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்... - கழகங்களில் தொடரும் முட்டல் மோதல்! https://bit.ly/2UZjZ5q

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு