Published:Updated:

``ஓ.பி‌.எஸ்-ஐ ஜெயலலிதாவுக்கு முன்பே தேர்ந்தெடுத்தவன் நான்” - தேனியில் ஆர்‌.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

``தமிழகத்தில் அதிமுக எங்கள் பங்காளி கட்சி, எங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக்கொள்வோம். ஆனால், பாஜக எங்கள் பகையாளிக் கட்சி. ஒருபோதும் திமுக, பாஜக-வுடன் சேராது.” - ஆர்‌.எஸ்.பாரதி

``ஓ.பி‌.எஸ்-ஐ ஜெயலலிதாவுக்கு முன்பே தேர்ந்தெடுத்தவன் நான்” - தேனியில் ஆர்‌.எஸ்.பாரதி

``தமிழகத்தில் அதிமுக எங்கள் பங்காளி கட்சி, எங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக்கொள்வோம். ஆனால், பாஜக எங்கள் பகையாளிக் கட்சி. ஒருபோதும் திமுக, பாஜக-வுடன் சேராது.” - ஆர்‌.எஸ்.பாரதி

Published:Updated:
ஆர்.எஸ்.பாரதி

திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், போடி திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

கூட்டத்தில் பேசிய அவர், ``திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்க வேண்டுமென்றால் இருக்கிற நேரம் போதாது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது தமிழக அரசு ஐந்தே முக்கால் லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தது.‌ ஆனால், அவரின் நிர்வாகத் திறமையால் கடனைச் சமாளித்துவருவதோடு, மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்திவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

இது பெண்களுக்கான ஆட்சி. பெண்களின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சிக்காகச் செயல்படும் திமுக ஆட்சியைப் பாராட்டி, வடமாநிலங்களிலுள்ள ஊடகங்களெல்லாம் பேசுகின்றன. எல்லோரும் சொன்னார்கள், ஸ்டாலின் முதலமைச்சராக வந்ததும் எதிர்க்கட்சிகளையெல்லாம் பழிவாங்குவார் என. ஆனால், யாரும் பழிவாங்கப்படவில்லை.‌ ஜெயலலிதாவைவிட எடப்பாடி பழனிசாமியை மரியாதையாக நடத்தியது ஸ்டாலின்தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் போன்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்கின்றனர்.‌

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசுப் பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிருந்த பெண்கள் அனைவரும் சகோதரனைப்போல பார்த்தனர். எடப்பாடி மீது உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தைரியம் இருந்திருந்தால் சந்தித்திருக்க வேண்டும். அதை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளார்.

ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில்...
ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில்...

தமிழ்நாட்டில் அதிமுக எங்கள் பங்காளிக் கட்சி, எங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக்கொள்வோம். ஆனால் பாஜக எங்கள் பகையாளிக் கட்சி. ஒருபோதும் திமுக, பாஜக-வுடன் சேராது.‌

1996-ல் தமிழ்நாடு நகராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக ஓ.பி.எஸ்-ஸுக்கு முதன்முதலில் மாநில அளவில் அரசியலில் பதவி வழங்கியது நான்தான். அதைத் தொடர்ந்துதான் 2002-ல் ஜெயலலிதாவால் முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.‌ ஓ.பி‌.எஸ்-ஸை ஜெயலலிதா தேர்ந்தெடுப்பதற்கு முன்பு தேர்ந்தெடுத்த எனக்கு அவர் நன்றி கூற வேண்டும்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

அதேபோல முன்னாள் முதல்வர் எம்‌.ஜி.ஆருக்கும் முதன்முதலில் 1967 தேர்தலில் டெபாசிட் செலுத்தியதும் நான்தான்.‌ அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும் மூன்று முறை முதலமைச்சரானார்.‌ என்னுடைய கை ராசியானது. இன்றைய அதிமுக-வில் இருப்பவர்கள் யாரும் எம்.ஜி.ஆரைப் பார்த்ததில்லை. ஜெயலலிதாவை மட்டும் பார்த்திருப்பார்கள். திமுக-விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அவருடன் நான் சென்றிருந்தால் எனக்கும் பெரிய அளவில் பதவி வழங்கப்பட்டிருக்கும். ஆனால் நான் செல்லவில்லை. கடைசிவரை ஒரே கட்சிதான் என திமுக-விலேயே இருந்துவிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவாரூர் வீதியில் கலைஞர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அண்ணாமலை யார்... திருவாரூரில் உள்ள தெருவுக்கு அல்ல அந்த ஊருக்கே கலைஞர் பெயர் வைக்கலாம். அண்ணாமலை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அண்ணாமலை, முருகன் அல்ல, மோடியே வந்தாலும் அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது. இங்கு திமுக - அதிமுக என எங்களுக்குள் எப்போதும் சண்டை இருக்கும். அதைவைத்து உங்களால் எதுவும் செய்ய முடியாது.

மேலும், கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றிவருகிறது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏன் வழங்கவில்லை என பத்தாண்டுக்காலம் ஆட்சியில் இருந்த அதிமுக கேட்பதற்கு தகுதி கிடையாது.‌ அரசு ஊழியர்களைப் பாதுகாக்கும் இயக்கமாக திமுக எப்போதும் இருக்கும்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

மெரினாவில் கலைஞருக்கு சமாதி கட்ட இடம் கொடுக்க மறுத்தார் எடப்பாடி. ஆனால் திமுக-வினரின் சட்டப் போராட்டத்தால் வெற்றி கிடைத்தது.‌ தற்போது முதலமைச்சரான பிறகு ஸ்டாலின் நினைத்திருந்தால் ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்திருக்க முடியும். ஆனால் மு.க.ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை. எங்களுக்கு யாரையும் பழிவாங்கவேண்டிய அவசியமில்லை.

ஜூன் 28-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் ஆகியோர் எங்கே போகப் போகிறார்கள் என யாருக்குத் தெரியும், பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism