Published:Updated:

'முதல்வரான ஸ்டாலின்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளைச் சட்டைக்கு மாறிய தி.மு.க நிர்வாகி!'

வெள்ளைச் சட்டைக்கு மாறிய சேகர்
வெள்ளைச் சட்டைக்கு மாறிய சேகர்

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், இதுவரை தான் அணிந்திருந்த கறுப்புச்சட்டை கழற்றிவிட்டு, வெள்ளை சட்டைக்கு மாறினார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உடன், அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதனைக் கொண்டாடும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க’வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: கம்பம் வழியாக கேரளா செல்ல `கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்! - ஏலக்காய் விவசாயிகள் வேதனை
வெள்ளைச் சட்டைக்கு மாறிய சேகர்
வெள்ளைச் சட்டைக்கு மாறிய சேகர்

இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி தி.மு.க கிளைச்செயலாளரான சேகர், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியை கண்டிக்கும் விதமான தான் அணிந்திருந்த கறுப்பு சட்டையை கழற்றிவிட்டு, வெள்ளைச் சட்டை அணிந்து கொண்டார். அவருக்கு, கட்சி நிர்வாகிகள் வெள்ளை சட்டை பரிசளித்து உற்சாகப்படுத்தினர்.

கறுப்புச்சட்டையில் சேகர்
கறுப்புச்சட்டையில் சேகர்
தேனி:'கொரோனா காலத்திலும் வங்கி வாசலில் முதியவர்கள்... வீடு தேடி வருமா உதவித்தொகை?'

இது தொடர்பாக சேகர் கூறும்போது,“கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியமைக்கும் போது அ.தி.மு.க ஆட்சியை எதிர்த்து நான் கறுப்புச்சட்டை அணிந்தேன். 2016-ஆம் ஆண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தது. ஆனால், நான் கறுப்புச்சட்டை அணிவதை மாற்றவில்லை. சுமார் பத்து ஆண்டுகள் கழித்து எங்களுடைய தி.மு.க வெற்றி பெற்று, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார். இந்த நாளை வெற்றி நாளாக கொண்டாட, நான் கறுப்புச்சட்டையைக் கழற்றிவிட்டு, வெள்ளைச் சட்டைக்கு மாறியிருக்கிறேன்.” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு