Published:Updated:

பா.ம.க-வுடன் தி.மு.க மறைமுகப் பேச்சு...? மனு விவகாரம் மூலம் அதிர்வைக் கிளப்பும் திருமா!

திருமாவளவன், மு. க. ஸ்டாலின்
திருமாவளவன், மு. க. ஸ்டாலின்

தி.மு.க தரப்பில் 15 தொகுதிகளிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள். 'அதிகம்போனால் தைலாபுரத்துக்கு 20 தொகுதிகளுக்கு மேல் தரக் கூடாது' என்பதிலும் தெளிவாக இருக்கிறது அறிவாலயம்.

''ஒருநாள் மழைக்கே சென்னை மிதந்துவிட்டதே!'' - ரெயின் கோட்டைக் கழற்றியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

''திருமாவளவன் பேச்சால் தி.மு.க தரப்பு கடும் அப்செட் என்கிறார்களே..?''

''தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர் இது குறித்து காட்டமாகக் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் விவாதித்திருக்கிறார்கள். 'தேர்தல் நேரத்துல தேவையில்லாம எதுக்காக மனு தர்ம விவகாரத்தை திருமா கையிலெடுக்கணும்... அவர்களைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிடலாம்னாலும் கேட்க மாட்டேங்குறீங்க' என்று கோபித்திருக்கிறார்கள்.

அவர்களிடம், 'திருமா பேச்சுக்கு நாம் ஆதரவு கொடுக்காவிட்டால், பா.ஜ.க-வுக்கு நாம் பணிந்துவிட்டோம் என்று தகவல் பரப்புவார்கள்' என்று சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். திருமாவின் கொந்தளிப்புக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.''

''என்னவாம்?''

''பா.ம.க-வுடன் தி.மு.க நடத்தும் மறைமுகப் பேச்சுவார்த்தை திருமாவுக்குப் பிடிக்கவில்லை. தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வன்னியர் சமூக தி.மு.க பிரமுகர் ஒருவரிடம், 60 தொகுதிகளில் பேரத்தை ஆரம்பித்து 48 தொகுதிகள் வரை இறங்கி வந்திருக்கிறதாம் பா.ம.க தரப்பு. தி.மு.க தரப்பில் 15 தொகுதிகளிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள். 'அதிகம்போனால் தைலாபுரத்துக்கு 20 தொகுதிகளுக்கு மேல் தரக் கூடாது' என்பதிலும் தெளிவாக இருக்கிறது அறிவாலயம்.

பா.ம.க-வுடன் தி.மு.க மறைமுகப் பேச்சு...? மனு விவகாரம் மூலம் அதிர்வைக் கிளப்பும் திருமா!

பா.ம.க-வைக் கூட்டணிக்குள் இழுத்தால், விடுதலைச் சிறுத்தைகளால் அந்தக் கூட்டணியில் தொடர முடியாது. 'இந்தக் கணக்குகள் தெரிந்ததால்தான் மனுதர்ம விவகாரம் மூலமாகக் கூட்டணிக்குள் அதிர்வைக் கிளப்பி, ஸ்டாலின் வாயாலேயே தனக்கு ஆதரவு தெரிவிக்கும்படியான சூழலை உருவாக்கிவிட்டார்' என்கிறார்கள் திருமாவுக்கு நெருக்கமானவர்கள்.''

''ஓஹோ... 'தி.மு.க-வுடன் உறவா?' என்று சின்ன மருத்துவர் கோபித்திருப்பாரே?''

''அவர் கோபத்தை யார் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்? 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்குப் போனபோதும், இதேபோலத்தான் முறுக்கிக்கொண்டு நின்றார் அன்புமணி. முடிவில் ராமதாஸின் கட்டளையை ஏற்கவில்லையா? அ.தி.மு.க கூட்டணியில் துணை முதல்வர் பதவியும், 60 சீட்டும் பா.ம.க எதிர்பார்க்கிறது. இதற்கு ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டாராம் எடப்பாடி. இதைத் தொடர்ந்துதான் தி.மு.க முகாமிடமும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

முடிவாக, `தி.மு.க என்ன ஒதுக்குகிறதோ, அதை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்துக்குள் நுழைவதுதான் புத்திசாலித்தனம்' என்று மகனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறாராம் ராமதாஸ்.''

''சரிதான்!''

> ரஜினி அறிக்கையின் பின்னணி என்ன?

> ஆளும்கட்சித் தரப்பில் தேர்தல் செலவுகளுக்கான திட்டங்கள் என்னென்ன?

- இவற்றுடன் கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட் முழுவதையும் ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2TDLeB9 > மிஸ்டர் கழுகு: அடகுக் கடையில் பணம்! - தேர்தலுக்குத் தயாராகும் ஆளுங்கட்சி... https://bit.ly/2TDLeB9

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு