Published:Updated:

ஸ்டாலின் சென்டிமென்ட்டைக் கையில் எடுக்கும் உதயநிதி! - இளைஞரணி பதவியேற்பில் எழும் 6 கேள்விகள்

உதயநிதி, ஸ்டாலின்

யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்களோ, அவர்களையெல்லாம் சாமார்த்தியமாக ஒதுக்கியதில்தான் தி.மு.க தலைவரின் வெற்றி இருக்கிறது. சொல்லப் போனால், ஸ்டாலினின் அரசியல் பயணத்துக்கும் உதயநிதியின் அரசியல் பயணத்துக்குமான இடைவெளி என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான்

ஸ்டாலின் சென்டிமென்ட்டைக் கையில் எடுக்கும் உதயநிதி! - இளைஞரணி பதவியேற்பில் எழும் 6 கேள்விகள்

யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்களோ, அவர்களையெல்லாம் சாமார்த்தியமாக ஒதுக்கியதில்தான் தி.மு.க தலைவரின் வெற்றி இருக்கிறது. சொல்லப் போனால், ஸ்டாலினின் அரசியல் பயணத்துக்கும் உதயநிதியின் அரசியல் பயணத்துக்குமான இடைவெளி என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான்

Published:Updated:
உதயநிதி, ஸ்டாலின்

சுபமுகூர்த்த தினமான இன்று தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளராகப் பதவியேற்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக ஸ்டாலின் வசம் இருந்த இந்தப் பதவி, கடந்த 2 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கைக்குள் அடங்கியிருந்தது. ` புதிய வாக்காளர்களை ஈர்க்கவும் கட்சிக்கு ஒரு கிளாமர் முகம் தேவை என்பதற்காகவும் இன்னொரு வாரிசாக உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார்' என்கின்றனர் அறிவாலய சீனியர்கள். உதயநிதியின் வருகையால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படாவிட்டாலும், குடும்ப உறவுகளுக்குள் முணுமுணுப்புகள் கிளம்பியுள்ளன.

ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன்
ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன்

1. தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனாக இருந்தாலும் திரைப்பட நடிகராக பிரசாரக் களத்துக்குச் சென்ற உதயநிதிக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் பிளஸ் 22 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்தார் உதயநிதி. தி.மு கழகத்தின் 400 பேச்சாளர்களையும் களத்தில் இறக்காமல் ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவர் மட்டுமே களத்தில் வலம் வந்தனர். கழகத்தின் 400 பேச்சாளர்களுக்கும் தலா 10,000 ரூபாயைக் கொடுத்து கோடைக் காலத்தில் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். ` கலைஞர் இருந்திருந்தால் எங்களையெல்லாம் வீதிகள்தோறும் பேசவிட்டிருப்பார். ஸ்டாலின் குடும்பத்தினர் மத்தியில் ஏதோ திட்டம் இருக்கிறது' என்ற சலசலப்பும் அப்போது எழுந்தது. தேர்தல் முடிவில் 37 மக்களவைத் தொகுதிகளையும் 13 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது தி.மு.க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள், ` உதயநிதியை இளைஞர் அணியின் மாநில செயலாளராக நியமிக்க வேண்டும்' என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றி அறிவாலயத்துக்கே நேரில் வந்து கொடுத்தனர். இதன் பின்னணியில் ஸ்டாலின் குடும்பமும் திருச்சி அன்பில் பொய்யாமொழி மகேஷும் இருப்பதாகத் தகவல் வெளியானது. அதற்கேற்ப, வெள்ளக்கோவில் சாமிநாதனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதன் நீட்சியாக உதயநிதி பதவியேற்புக்கு நாள் குறிக்கும் வேலைகள் அரங்கேறின. 2019 ஜூலை 3 அன்று கருணாநிதியின் பிறந்தநாளில் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பதவியேற்பார் எனச் சொல்லப்பட்டது. இதனை முன்னிறுத்தியே, அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தக் கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஆவடி நாசர், ` இளைஞர் அணிக்கு உதயநிதி வந்தால் நல்ல கூட்டம் சேரும்' எனப் பேசினார். அவரது பேச்சுக்குக் கூட்டத்தில் இருந்து எந்த ஆதரவும் கிளம்பவில்லை. இந்தக் கருத்தை அடுத்தகட்டமாக முன்னெடுத்துச் செல்லவும் யாரும் தயாராக இல்லை. ஆதரவுக்கே ஆள் இல்லை என்றால், உதயநிதி வருகைக்கு மறைமுக எதிர்ப்பு இருக்கிறது என்பதை ஸ்டாலின் குடும்பமும் உணர்ந்து கொண்டது. ஆனாலும், `உதயநிதி பதவியேற்றாக வேண்டும்' என்பதில் ஸ்டாலின் குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` இன்று மதியம் 3 மணியளவில் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பதவியேற்க இருக்கிறார். அவர் வருவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. மாறாக யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்களோ, அவர்களையெல்லாம் சாமார்த்தியமாக ஒதுக்கியதில்தான் தி.மு.க தலைவரின் வெற்றி இருக்கிறது. சொல்லப் போனால், ஸ்டாலினின் அரசியல் பயணத்துக்கும் உதயநிதியின் அரசியல் பயணத்துக்குமான இடைவெளி என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான்" என விவரிக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர்,

தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

3. `` தி.மு.க-வின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது இளைஞர் அணிச் செயலாளர் பதவி. இந்தப் பதவியை அவ்வளவு எளிதாக ஸ்டாலினுக்குக் கருணாநிதி கொடுத்துவிடவில்லை. கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க என்ற பெயரில் கட்சியின் சார்பு மன்றம் ஒன்றை நடத்தி வந்தார் ஸ்டாலின். இதன் தொடர்ச்சியாக இளைஞர் அணியை வலுப்படுத்தும்விதமாக ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, திருச்சி சிவா, வாலாஜா அசேன், தாரை மணியன் ஆகியோர் கொண்ட ஐவர் அணி ஒன்று உருவாக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு மாநில அமைப்புக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அணியின் தலைவராகவோ செயலாளராகவோ யாரும் நியமிக்கப்படவில்லை. இந்தக் குழுவினர் மாநிலம் முழுவதும் பயணம் செய்து, அங்குள்ள இளைஞர்களைச் சந்தித்துப் பேசி கட்சிக்குள் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஊரிலும் உறுப்பினர் சேர்க்கை வேலைகள் தீவிரமாக நடந்தன. இதன் பயனாக, 82-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இளைஞரணியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் செயலாளராக அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின். அப்போது துணைச் செயலாளர்களாக திருச்சி சிவாவும் தாரை மணியனும் நியமிக்கப்பட்டனர். 1983-ம் ஆண்டு நவம்பரில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். திருச்சிக்கு பொய்யாமொழியும் சென்னைக்குப் பரிதி இளம்வழுதியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

4. இளைஞர் அணியின் பொறுப்பில் 2 ஆண்டுகள் முழுமையாகப் பணியாற்றிய பிறகும், ஸ்டாலின் வருகை தொடர்பாக சில விவாதங்கள் நடந்தன. `ஸ்டாலின் பதவியேற்க வேண்டும்' என்ற கருத்தைத் தொடங்கி வைத்தார் க.சுப்பு. இதனை நாசூக்காக மறுத்த கண்ணப்பன், `தலைவருக்குச் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார். ஸ்டாலின் வருகைக்கு பெரியளவில் ஆதரவு இருந்தாலும், `இப்போதைக்கு வேண்டாமே' எனச் சொல்வதற்கும் அன்றைய தி.மு.க-வில் இடம் இருந்தது. இப்போது உதயநிதிக்கு அப்படிப்பட்ட எதிர்ப்புகள் இல்லை என்றாலும், மேடைகளில் தீவிரமாகப் பேசுவது மட்டுமே அரசியல் ஆகிவிடாது என்பதுதான் சிலரது எண்ணமாக இருக்கிறது. ஒருவர் போலவே இன்னொருவர் இருக்க முடியாது. போட்டிகள் நிறைந்த அரசியல் உலகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவரை முன்னிறுத்தும்போது இணைச் செயலாளர் அல்லது துணைச் செயலாளர் என எதாவது ஒரு பொறுப்பைக் கொடுப்பதே சரியானதாக இருக்க முடியும். இணை அல்லது துணைச் செயலாளர் பதவி என்பது கௌரவக் குறைச்சல் அல்ல.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

5. தற்போது உதயநிதியும் சினிமாவை விட்டுவிட்டு, `முழுநேர அரசியல்தான் அடுத்தகட்டம்' எனத் தீர்மானிக்கவில்லை. அப்படி களத்துக்குள் வராத ஒருவருக்கு இப்படியொரு உயர் பதவியைக் கொடுத்திருப்பது சரியானதுதானா என்ற கேள்வியும் எழுகிறது. சொல்லப் போனால், கட்சிக்குள் இன்னொரு வாரிசை உருவாக்கியிருக்கிறார்கள். `உதயநிதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்' எனக் கருதப்பட்ட அழகிரியை மிக எளிதாக ஓரம்கட்டிவிட்டார் ஸ்டாலின். இதற்கு அழகிரியின் செயல்பாடுகளும் ஒரு காரணம். அடுத்த அச்சுறுத்தலாகக் கனிமொழியும் தயாநிதியும் இருந்தார்கள். அவர்களுக்கும் மக்களவைத் தேர்தலில் சீட்டைக் கொடுத்து டெல்லி அரசியலோடு நிறுத்தி வைத்துக் கொண்டார் ஸ்டாலின். ஆக, களத்தைச் சமார்த்தியமாகக் காலி செய்துவிட்டு உதயநிதியைக் கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு பெரிய பொறுப்பை எடுத்துக் கொண்டதால், சினிமாவில் நடிப்பதைக் குறைத்துவிட்டுப் போராட்டக் களத்துக்கு உதயநிதி வந்தால் மட்டுமே எடுபட முடியும்" என்கின்றனர் இயல்பாக.

6. இன்று மாலை 3 மணிக்குப் பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின், 6 மணியளவில் இளைஞர் அணியின் அலுவலகமான அன்பகத்துக்குச் செல்ல இருக்கிறார். இனி அங்கிருந்தே இளைஞர் அணிக்கான வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க இருக்கிறார். கருணாநிதி இருந்தபோது இதேபோன்றுதான் அன்பகத்தில் இருந்து செயல்பட்டார் ஸ்டாலின். அதே செண்டிமென்ட் பாணியைக் கையாள இருக்கிறார் உதயநிதி.

ஸ்டாலின், உதயநிதி
ஸ்டாலின், உதயநிதி

` உதயநிதியின் அரசியல் சென்டிமெண்ட், கழகத்தின் வளர்ச்சிக்கு உதவுமா?' என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism