Published:Updated:

தி.மு.க அணிகளின் நிர்வாகிகள் மாற்றம்?! - அதிரடித் திட்டத்தில் அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வில் புதியவர்களுக்குப் பொறுப்பு கொடுக்கும் வகையிலும், வேலை செய்யாத நிர்வாகிகளை நீக்கவும் அணிகளின் நிர்வாகிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருக்கிறதாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு அமைந்ததிலிருந்து மாற்றுக் கட்சிகளிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் வந்துகொண்டிருப்பதால், தி.மு.க-விலுள்ள அணிகளில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறதாம் கட்சித் தலைமை.

இது பற்றி அண்ணா அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, ``தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு கட்சிகளிலிருந்தும் வி.ஐ.பி-க்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் தி.மு.க-வில் இணைந்தபடியிருக்கிறார்கள். அ.ம.மு.க-விலிருந்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த், ம.நீ.ம-விலிருந்து டாக்டர் மகேந்திரன் போன்ற பெருந்தலைகளும் அதில் அடங்குவர். இது போன்று தொடர்ச்சியாகப் பலர் இணைந்துகொண்டிருப்பதால் அவர்களுக்கெல்லாம் கட்சியில் பொறுப்புகள் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இப்படிப் புதியவர்களுக்குப் பொறுப்பு கொடுக்கும் சாக்கில், வேலை செய்யாத பழைய நிர்வாகிகளையும் நீக்க வேண்டியிருக்கிறது.

மகேந்திரன், பழனியப்பன்
மகேந்திரன், பழனியப்பன்

தி.மு.க-வில் தொண்டரணி, இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, மீனவரணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞரணி, நெசவாளரணி, பொறியாளரணி, மருத்துவரணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு, வர்த்தகரணி, தகவல் தொழிநுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, வெளிநாடுவாழ் இந்தியர் நல அணி என மொத்தம் 20 அணிகள் உள்ளன.

வாய் தவறி ஏதேனும் வார்த்தை வந்திருக்கலாம்! - ஒப்புக்கொள்கிறார் விஜிலா சத்யானந்த்

ஒவ்வோர் அணியிலும் மாநில அளவில் தலைவர், செயலாளர், துணை, இணைச் செயலாளர், மாவட்ட அளவில் அமைப்பாளர், துணை அமைப்பாளர் போன்ற பொறுப்புகளும் உள்ளன. புதிதாக இணைந்தவர்களில் வி.ஐ.பி-க்களை மட்டுமே பேரன்ட் பாடியில் பொறுப்புகள் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கு அவர்களின் படிப்பு, வேலைக்கேற்ப இந்த 20 அணிகளில்தான் பொறுப்பு கொடுக்க முடியும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எனவே, புதியவர்களுக்குப் பொறுப்பு கொடுக்கும் வகையிலும், வேலை செய்யாத நிர்வாகிகளை நீக்கவும் அணிகளின் நிர்வாகிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இதற்கான அறிவிப்பு அறிவாயத்திலிருந்து வெளியாகலாம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு