Published:Updated:

ராஜினாமா விவகாரம்: `அழுத்தத்தால் நெஞ்சுவலி வந்துவிட்டது'-திமுக துணைத் தலைவர் மருத்துவனையில் அனுமதி!

துணைத் தலைவர்

கட்சித் தலைமையின் உத்தரவு எனக் கூறி தி.மு.க-வினர் கொடுத்த அழுத்தத்தால் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார் பெரியகுளம் நகராட்சித் துணைத் தலைவர் ராஜா முஹம்மது.

ராஜினாமா விவகாரம்: `அழுத்தத்தால் நெஞ்சுவலி வந்துவிட்டது'-திமுக துணைத் தலைவர் மருத்துவனையில் அனுமதி!

கட்சித் தலைமையின் உத்தரவு எனக் கூறி தி.மு.க-வினர் கொடுத்த அழுத்தத்தால் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார் பெரியகுளம் நகராட்சித் துணைத் தலைவர் ராஜா முஹம்மது.

Published:Updated:
துணைத் தலைவர்

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இவற்றில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 15 வார்டுகளிலும், அ.தி.மு.க 8 வார்டுகளிலும், அ.ம.மு.க., சுயேச்சைகள் தலா 3 வார்டுகளிலும், பா.ம.க ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன. பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் பதவியை தி.மு.க-வுக்கும், துணைத் தலைவர் பதவியை அதன் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.க தலைமை ஒதுக்கீடு செய்தது. அதன்படி, நகர்மன்றத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க கவுன்சிலர் சுமிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜா முஹம்மது
ராஜா முஹம்மது

அதைத் தொடர்ந்து துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரான 15-வது வார்டு கவுன்சிலர் பிரேம்குமார் மனுத்தாக்கல் செய்வதற்கு வந்திருந்தார். ஆனால், தி.மு.க-வின் 26-வது வார்டு கவுன்சிலரான ராஜா முஹம்மது துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதனால் விரக்தியடைந்த வி.சி.க வேட்பாளர் பிரேம்குமார் வேட்புமனு தாக்கல் செய்யாமலும், தேர்தலில் பங்கேற்காமலும் வெளிநடப்பு செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால் தி.மு.க கவுன்சிலர் ராஜா முஹம்மது நகர்மன்றத் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசிக
விசிக

அதையடுத்து, கூட்டணி தர்மத்தை மீறியதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெரியகுளம் எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டு கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.

தலைமையின் உத்தரவை மீறி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றிபெற்ற தி.மு.க-வினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டும், தற்போது வரை ராஜா முஹம்மது தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜா முஹம்மது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ராஜா முஹம்மதுவிடம் கேட்டபோது, ``பெரியகுளம் நகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அந்தக் கட்சி வேட்பாளர்களைத் தோல்வியடையச் செய்ய அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரேம்குமார், பவானி ஆகியோர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

மருத்துவமனையில் ராஜா முஹம்மது
மருத்துவமனையில் ராஜா முஹம்மது

விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி பெறாத காரணத்தினால்தான் துணைத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது சுயேச்சையாக வெற்றிபெற்ற பிரேம்குமாருக்கு துணைத் தலைவர் பதவியை விட்டுத்தர வேண்டும் என்கின்றனர். மேலும் இது தலைமையின் உத்தரவு என தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் அழுத்தத்தால் எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெற்றிபெறாத நிலையில் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்வது நியாயம் இல்லை. நான் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை'' என்றார்.