Published:Updated:

கிஷோர் Vs சுனில்... - தி.மு.க - அ.தி.மு.க `தேர்தல் வியூக' நிலவரம்!

சுனிலும் பிரஷாந்த் கிஷோரும் பா.ஜ.க-வுக்கு தேர்தல் வியூகம் வகுத்துப் பணியாற்றினார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பிரஷாந்த் கிஷோருக்கும் பா.ஜ.க-வுக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''ஜூன் முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்துக்கு அ.தி.மு.க தயாராவதை ஏற்கெனவே கூறியிருந்தேன். இந்தப் பட்டியலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு திருவள்ளூர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு விருதுநகர் என வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாம்'' என்ற கழுகார், ''இன்னொரு சுவாரஸ்யத் தகவலும் இருக்கிறது'' என்றபடி தொடர்ந்தார்.

''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ், சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர். இப்போது சங்ககிரியில் குடியிருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி தொகுதியைக் குறிவைத்திருக்கும் மைத்துனர் வெங்கடேஷுக்குத் தொகுதியை ஒதுக்குவதாக எடப்பாடி கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம்.

கிஷோர் Vs சுனில்... - தி.மு.க - அ.தி.மு.க `தேர்தல் வியூக' நிலவரம்!

குஷியான வெங்கடேஷ், சங்ககிரி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ராஜாவை அழைக்காமலேயே தொகுதிக்குள் கொரோனா நிவாரணப் பொருள்களை வழங்க ஆரம்பித்துவிட்டார். முதல்வரின் மைத்துனர் என்பதால் வெளியில் சொல்ல முடியாமல் ராஜா தரப்பு விரக்தியில் நொந்துபோயிருக்கிறது'' என்றார் கழுகார்.

கிஷோர் Vs சுனில்... - தி.மு.க - அ.தி.மு.க `தேர்தல் வியூக' நிலவரம்!

'' 'ஆளுங்கட்சியின்மீது அடுக்கடுக்காக லஞ்ச ஒழிப்புத்துறையில் நான் புகாரளித்ததே என் கைதுக்குக் காரணம்' என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தாரே?"

"திட்டம் அதைவிடப் பெரியது" என்று இழுத்த கழுகார் கூறிய உள்ளரசியல் விவகாரம் முழுவதையும் ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: டார்கெட் உதயநிதி... பி.ஜே.பி-யின் பிக் பிளான்! Click here https://bit.ly/2ZHbAGP

கிஷோர் Vs சுனில்...

அடுத்த சட்டமன்றத் தேர்தல், அ.தி.மு.க - தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கிடையே நடக்கும் போட்டியாக மட்டும் இருக்காது... தேர்தல் வியூக வல்லுநர்களான சுனில் - பிரஷாந்த் கிஷோர் மோதல் களமாகவும் இருக்கும் எனப் பரபரக்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

கிஷோர் Vs சுனில்... - தி.மு.க - அ.தி.மு.க `தேர்தல் வியூக' நிலவரம்!

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுனிலும் பிரஷாந்த் கிஷோரும் பா.ஜ.க-வுக்கு தேர்தல் வியூகம் வகுத்துப் பணியாற்றினார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பிரஷாந்த் கிஷோருக்கும் பா.ஜ.க-வுக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. பா.ஜ.க-வுக்குப் பணியாற்றுவதிலிருந்து விலகி, ஐபேக் நிறுவனத்தை ஆரம்பித்தார் கிஷோர். பா.ஜ.க-வுக்கு தொடர்ந்து பணியாற்றிவந்த சுனிலை, சபரீசன் மூலமாக தி.மு.க-வுக்கு அழைத்தனர். ஓ.எம்.ஜி என்ற பெயரில் குழுவை உருவாக்கி, அதன்மூலம் தி.மு.க-வுக்குப் பணியாற்றத் தொடங்கினார் சுனில்.

இந்த நிலையில், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பிரஷாந்த் கிஷோரை தி.மு.க-வுக்குக் கொண்டுவருவதற்கான வேலைகளைத் தொடங்கினார். இடைப்பட்ட ஐந்தாண்டுகளாக தி.மு.க-வின் மாஸ்டர் மைண்டாக இருந்த சுனிலால், இதை ஏற்றக்கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தொடர்ந்து, 2019, நவம்பர் மாதம் தி.மு.க-வுக்குப் பணியாற்று வதிலிருந்து வெளியேறினார் சுனில்.

அதன்பின், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுனிலைப் பரிந்துரை செய்தனர். 'சுனில், தி.மு.க-வின் பலம், பலவீனம் அறிந்தவர். ஏற்கெனவே தமிழகத்தின் அரசியல் நிலவரத்தை அறிந்து வைத்திருப்பவர்' என்று காரணங்களை அடுக்கியுள்ளனர். அதன் பிறகே, சுனில் அ.தி.மு.க பக்கம் கொண்டுவரப்பட்டார்.

- தற்போது இரு தரப்பின் செயல்பாடுகளை உள்ளடக்கிய முழுமையான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > பழைய பகைக்கு ஆடுகளம் அமைக்கப்போகும் தமிழக தேர்தல்! Click here https://bit.ly/2ZFqQE8

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு