Published:Updated:

`தி.மு.க இந்த வருட இறுதிக்குள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும்!’ - கே.பி.ராமலிங்கம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

"கட்சியில் நீங்கள் மட்டும் தலைவராகலாம். மற்றவர்கள் பதவி ஆசைப்படுவதில் என்ன தவறு?'' எனத் தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளராக இருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் கொதிக்கிறார்.

தி.மு.க-வும் பா.ஜ.க-வும் அடிப்படைக் கொள்கை முரண்பாடு உள்ள கட்சிகள். அப்படியிருக்கும்பட்சத்தில் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயாளர் துரைசாமி பா.ஜ.க-வுக்குத் தாவி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வமும் டெல்லி சென்று பா.ஜ.க தேசிய தலைவரை சந்தித்து வந்திருக்கிறார். தி.மு.க தலைமையில் அப்படி என்ன பிரச்னை உள்ளது என தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளராக இருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கத்திடம் கேட்டோம்.

``தி.மு.க என்பதைவிட ஸ்டாலினால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்கிறார்கள். ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைமையை ஏற்றிருக்கிறாரே தவிர, அவர் இன்னும் தலைவர் ஆக வில்லை.

கே.பி.ராமலிங்கம்
கே.பி.ராமலிங்கம்

தலைவராகும் தகுதியும் அவரிடம் இல்லை. கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாததாலும், ஸ்டாலின் தகுதியை வளர்த்துக்கொள்ளாததாலும், கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். அண்ணாவும் கலைஞரும் மொழி, கலை, இலக்கிய வளம் மிக்க பன்முகத் தன்மைக் கொண்ட அறிஞர்களாகத் திகழ்ந்தார்கள்.

பழக்கடையில் ஆரம்பித்த பஞ்சாயத்து... பா.ஜ.க வலையில் கு.க.செல்வம் சிக்கிய பின்னணி!

மாவட்டச் செயலாளர் தேர்தலில் கலைஞர், அன்பழகனை ஆதரித்தபோது ஸ்டாலின் செல்வத்தை ஆதரித்தார். தற்போது தன் மகன் உதயநிதி பரிந்துரை செய்த சிற்றரசுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்து விட்டு செல்வத்தைப் புறக்கணித்து இருக்கிறார். ஸ்டாலின் கட்சிக்காரர்களை முன்னிலைப்படுத்துவதில்லை. குடும்பத்தினரையே முன்னிலை படுத்துகிறார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

மாநில இளைஞரணி அமைப்பாளர் பதவியை சுவாமிநாதனிடம் இருந்து பறித்து, தன் மகனுக்கு வழங்குகிறார். தனக்கு எடுபிடியாக இருந்தவர்களின் வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ளுகிறார். கட்சிக்கு நேர்மையாக வாழ்ந்தவர்கள் வாரிசுகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஸ்டாலினுக்கு பரந்த மனசோ, மனிதாபிமானமோ, மற்றவர்களை மதிக்கும் பண்போ, அறிவுக்கு மரியாதை கொடுக்கும் தன்மையோ இல்லாததால் இந்த வருட இறுதிக்குள் தி.மு.க மிகப்பெரிய சரிவை சந்திக்கும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு