Published:Updated:

``கிறிஸ்தவர்களின் ஜெபத்தால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது!"- ஜெபக்கூட்டத்தில் அமைச்சர் பேச்சு

ஜெபக்கூட்டத்தில் அமைச்சர் நாசர்  பேச்சு
ஜெபக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேச்சு

கிறிஸ்தவர்களின் ஜெபத்தின் வலிமையால்தான் தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தேவாலய ஜெபக் கூட்டம் ஒன்றில் பேசி இருக்கிறார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர்ப் பகுதியில் அமைந்துள்ள AG அற்புத ஜெபகோபுரம் தேவாலயத்தில் 40-ம் ஆண்டுவிழா நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழா, திருவள்ளூர் மாவட்ட அனைத்துச் சபைகளின் தலைவர் செல்லதுரை தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆவடி சிறுபான்மை மற்றும் அரசியல் குழு தலைவர் பிஷப் K.மேஷாக் ராஜா, சுவிசேஷகர் ஸ்டீபன், போதகர் ஐசக் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோல், விழாவில் முக்கிய அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டார். அப்போது விழாவில் பேசிய அமைச்சர் நாசர், ``இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தினர். சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்துவந்தனர். ஆனால் கடந்த ஏழு ஆண்டுகள் ஆட்சியில் சிறுபான்மையினர் பல்வேறு சோதனைகள் மற்றும் கஷ்டங்களைச் சந்தித்துவருகின்றனர். அதன் விளைவாக, விரைவில் இந்த ஆட்சிக்கு முடிவு வரும்.

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்
ராஜகண்ணப்பன் - திருமா 'நாற்காலி' சர்ச்சை! - உண்மையில் நடந்தது என்ன?

இந்த ஜெபக் கூட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறோம். இதுதான் மத நல்லிணக்கம், மத ஒற்றுமை என்பது. இந்தியா பல்வேறு மொழிகள், மதங்களைச் சார்ந்து இருந்தாலும் அனைவரும் வேற்றுமை இல்லாமல் இணக்கமாகப் பழகிவருவதால் இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது. கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால்தான் இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால்தான் இன்றைக்குத் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கிறது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசருடன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் நாசருடன் சேர்ந்து பங்கேற்ற திமுக-வினர் பலர் தேவாலய பலிபீடத்தில் ஏறி நின்றது கூட்டத்தில் குழுமியிருந்த கிறிஸ்தவர்களை முகம்சுளிக்கச் செய்துவிட்டது. பால்வளத்துறை அமைச்சர் நாசர், திமுக ஆட்சிக்கு வந்திருப்பது கிறிஸ்தவர்களின் ஜெபத்தால்தான் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு