இந்தியா சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதல் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இன்று டெல்லி இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இந்திய சீனா எல்லை தொடர்பான விவகாரம் பேசப்பட்டது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சவுத் பிளாக்கில் இருநாட்டு வெளியுறவு, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடன் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது, இந்தியா - சீன கட்டுப்பாட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சீனப் படைகளை, சீன அரசு வாபஸ் பெற வேண்டும் என அஜித் தோவால் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இருநாட்டு எல்லை பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சீனாவுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். இதற்குப் பதிலளித்த தோவல், எல்லை பிரச்னைகள் தீர்ந்தவுடன் சீனாவுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.