Published:Updated:

மதுரை : ``திமுக அரசு நீட் தேர்வு குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்"- டாக்டர்.கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

ஒன்றிய அரசு என அழைத்ததன் எதிர்விளைவாகத்தான் தமிழகத்தை கொங்குநாடு, தென்நாடு என கோரிக்கை எழும்நிலை ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"திமுக அரசு இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுவது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்..." என்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல் சர்ச்சைகள் பற்றி மதுரை வந்திருந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

தொடர்ந்து பேசியவர்,

"திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் மத்திய அரசு இந்தாண்டு நீட் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ளது. நீட் தேர்வு நடத்துவது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே மாணவர்களிடையே குழப்பத்தைத் தீர்க்க முடியும்.

தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை உள்ளது. அது சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது. அதை முறைப்படுத்த வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

பெண்களுக்கு உரிமைத் தொகை, பெட்ரோல் விலை குறைப்பு, நகை கடன் ரத்து போன்ற திமுகவின் தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவை ஒன்றியம் என அழைப்பது நம்மை நாமே சிறுமைபடுத்துவதுபோல உள்ளதால் திமுக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்றிய அரசு என அழைத்ததன் எதிர்விளைவாகத்தான் தமிழகத்தை கொங்குநாடு, தென்நாடு என கோரிக்கை எழும்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்களை வேறொரு நாட்டின் தொழில்நுட்பம் மூலமாக வேவுபார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பாக முழுமையான விவரங்களை கொண்டுவர வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலம் ஒரு அடி கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது. இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கையை தீவிரபடுத்த வேண்டும். எந்த கோயில்களிலும் வணிக கடைகளை அனுமதிக்ககூடாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு