Published:Updated:

"சிறையில் ஸ்டாலின் என்மேல்தான் விழுந்தார்!" - மிசா விவகாரத்தில் வெடிக்கும் கி.வீரமணி

கி.வீரமணி

போலீஸார் தாக்கியிருந்ததில் அவர் முகமெல்லாம் ரத்தம் வழிந்தோடியது. அவருக்கு ஆறுதல் கூறி, ரத்தம் வழிவதைத் துடைத்தவன் நான் என்பது ஆதாரபூர்வமான வரலாறு...

"சிறையில் ஸ்டாலின் என்மேல்தான் விழுந்தார்!" - மிசா விவகாரத்தில் வெடிக்கும் கி.வீரமணி

போலீஸார் தாக்கியிருந்ததில் அவர் முகமெல்லாம் ரத்தம் வழிந்தோடியது. அவருக்கு ஆறுதல் கூறி, ரத்தம் வழிவதைத் துடைத்தவன் நான் என்பது ஆதாரபூர்வமான வரலாறு...

Published:Updated:
கி.வீரமணி

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 1976 எமர்ஜென்சி காலகட்டத்தில் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்கிற விவாதம் கடந்த சில நாள்களாகச் சூடுபறக்கிறது. தனியார் தொலைக்காட்சிக்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் பொன்முடி அளித்த பேட்டியால்தான் இச்சர்ச்சை வெடித்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

45 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்துள்ள இச்சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "நீதிபதி ஷா கமிஷன் அறிக்கையில், மாநில வாரியாகக் கைதுசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை விவரங்களை வெளியிடும்போது, 'தமிழ்நாடு' எனக் குறிப்பிட்டு, 'அரசியல் கைதிகளில் மிசாவின்கீழ் அதிகமாகக் கைதுசெய்யப்பட்டது தி.மு.க, அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தாம் என்றும், அப்படிக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 பேர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிக் கைது செய்யப்பட்டவர்கள் எவரின் பெயரையும் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஸ்டாலின் பெயர் இல்லையே எனக் கேட்பது எவ்வளவு அபத்தமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை மத்திய சிறையில் தி.மு.க-வினருக்கு நேர்ந்த மிசா சிறைக் கொடுமைகள் குறித்து விசாரிக்க நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் விசாரணை கமிஷனே அமைக்கப்பட்டது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க மிசா கொடுமைகளைத் தாங்கிய மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க முன்னோடிகளின் வரலாற்றை மறைக்க முயல்பவர்களின் செயல் ஒருபோதும் பலிக்காது" எனக் கூறியுள்ளார்.

கி.வீரமணி
கி.வீரமணி

தி.மு.க தரப்பில் விளக்கமளித்தும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் ஸ்டாலின் மிசா விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "1976 பிப்ரவரி 3 அல்லது 4-ம் தேதியாக இருக்கலாம், இரவு 10 மணிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் 'மிசா'வில் கைதுசெய்யப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டார். நான் கைது செய்யப்பட்டு இருந்த அறையில் அவர் தள்ளப்பட்டபோது, என் மீதுதான் வந்து விழுந்தார். போலீஸார் தாக்கியிருந்ததில் அவர் முகமெல்லாம் ரத்தம் வழிந்தோடியது. அவருக்கு ஆறுதல் கூறி, ரத்தம் வழிவதைத் துடைத்தவன் நான் என்பது ஆதாரபூர்வமான வரலாறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எமர்ஜென்சி காலகட்டத்தில், சென்னை மத்திய சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து விசாரிக்க நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அளித்துள்ள அறிக்கையின் 29-ம் பக்கத்தில், முன்னாள் மேயரும் எம்.பி-யுமான சிட்டிபாபுவின் டைரிக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில், 'போலீஸார் தாக்க வந்தபோது என் தம்பி ஸ்டாலினைத் தள்ளிக்கொண்டு குறுக்கே ஓடினேன். தடியடிகள் என்மீது இடியாக விழுந்தன. தன்னோடு கைது செய்யப்பட்ட உடன்பிறப்புகள் அறைக்குள் வர ஸ்டாலின் உதவினார். அவர்கள் தரையில் படுக்க தனது மேல் துண்டை எடுத்து விரித்து உதவினார்' என டைரிக் குறிப்புகளில் உள்ளது.

இஸ்மாயில் கமிஷன் அறிக்கை
இஸ்மாயில் கமிஷன் அறிக்கை

1976, பிப்ரவரி 1, 2 தேதிகளில் சென்னை மத்திய சிறைச்சாலையில் என்ன நடந்தது என்பதை சிட்டிபாபுவே இப்படிக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஸ்டாலின் மிசா கைதியே இல்லை என வடிகட்டிய பொய்யைப் பரப்புகிறார்கள். கொஞ்சம்விட்டால், 'ஸ்டாலின் வேறு; இவர் வேறு' என்றுகூடச் சொல்வார்கள்போல" என கி.வீரமணி காட்டமாகக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism