Election bannerElection banner
Published:Updated:

தென்காசி: நரசிம்மர் கோயிலில் துர்கா ஸ்டாலின் - அரசியல் எதிரிகளை வெல்ல சிறப்பு வழிபாடு!

நரசிம்மர் கோயிலில் துர்கா ஸ்டாலின்
நரசிம்மர் கோயிலில் துர்கா ஸ்டாலின்

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வழிபட்டால் அனைத்துவித சூழ்ச்சிகளிலிருந்தும் விடுபட முடியும் என்பது ஐதீகம். அந்தக் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பிரார்த்தனை செய்து மனமுருக வழிபட்டார்.

தென் மாவட்டங்களில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். ஸ்டாலின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், அவருடன் வந்திருக்கும் துர்கா ஸ்டாலின் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்திவருகிறார்.

நாங்குநேரி பெருமாள் கோயிலில்
நாங்குநேரி பெருமாள் கோயிலில்

ஏற்கெனவே நெல்லை நாங்குநேரியிலுள்ள வானுமாமலை பெருமாள் கோயில், நெல்லையப்பர் கோயில் ஆகியவற்றில் துர்கா தனது சகோதரி மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் மனைவி ஆகியோருடன் சென்று வழிபட்டார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இன்று ஸ்டாலினின் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் ஸ்டாலின் அங்கு புறப்பட்டுச் சென்றதும், துர்கா ஸ்டாலின் தன்னோடு வந்திருந்தவர்களுடன் கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலுக்குச் சென்றார்.

கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயில்
கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயில்

`தட்சிண அகோபிலம்’ என்று அழைக்கப்படும் நரசிம்மர் கோயில் 1,100 வருடங்கள் பழைமை வாய்ந்தது. இங்கு 16 திருக்கரங்களுடன் அபூர்வ ஸ்ரீநரசிம்மர் காட்சியளிக்கிறார். இந்தக் கோயிலின் கல்வெட்டில் பெருமாளின் திருப்பெயர் முனையெதிர் மோகர் விண்ணகர் (போரில் எதிரிகளை வெல்பவர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

`ஸ்டாலினுக்கு பெருமாள் மேல் பக்தி உண்டா? - துர்கா ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

நரசிம்மர் கோயிலில் வழிபட்டால் அனைத்துவித சூழ்ச்சிகளையும் முறியடித்து, எதிரிகளே இல்லை என்கிற நிலைமையை உருவாக்க முடியும் என்பது ஐதீகம். அதனால் பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகவைத்திருக்கிறார்கள்.

வழிபாட்டில் பங்கேற்பு
வழிபாட்டில் பங்கேற்பு

இந்தக் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேள்விப்பட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோயிலுக்கு வருகை தந்தார். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளில் பங்கேற்ற அவர், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா, ஸ்ரீபத்மாவதி சமேத பிரசன்ன வேங்கடாசலபதி சுவாமியையும் தரிசித்தார்.

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலின் குருக்கள் ஆனந்தன் கூறுகையில், ``நரசிம்மர் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றால் நினைத்த காரியம் நடக்கும். அத்துடன் எதிரிகளின் சூழ்ச்சியை எளிதில் முறியடித்தும் வெற்றிகளைக் கைப்பற்ற முடியும் என்பது நம்பிக்கை.

கோயிலின் சிறப்பை விளக்கும் குருக்கள் ஆனந்தன்
கோயிலின் சிறப்பை விளக்கும் குருக்கள் ஆனந்தன்

நரசிம்மர் கோயிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலின், கோயிலின் தல புராணம் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் கேட்டார். கோயில் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். வழிபாட்டு நிகழ்ச்சிகளில் மிகுந்த பக்தியுடன் கலந்துகொண்டார்’’ என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு