Published:Updated:

வேலுமணியை விட்டாலும், கே.சி.பி நிறுவனத்தை விடாத அதிகாரிகள்; இரண்டாவது நாளாகத் தொடரும் ரெய்டு!

சந்திரபிரகாஷ்
சந்திரபிரகாஷ்

வேலுமணி வீட்டில் ரெய்டு முடிந்தாலும், கே.சி.பி நிறுவனத்தின் சந்திரபிரகாஷ் சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு தொடர்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். கோவையில் வேலுமணி வீட்டில் சோதனை நடக்க, சென்னையில் இருந்த வேலுமணியிடமும் நேரடியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கே.சி.பி அலுவலகம்
கே.சி.பி அலுவலகம்
வேலுமணி ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவாரா? | The Imperfect Show

நேற்று இரவு ரெய்டு முடிந்தநிலையில், வேலுமணி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்குச் சென்றுவிட்டார். அதிகாரிகள் வேலுமணியை விட்டாலும், கோவை கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாகச் சோதனை நடத்திவருகின்றனர்.

கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் அருகேயுள்ள கே.சி.பி இன்ஜினீயரிங் அலுவலகம், பெருஞ்சாமி கவுண்டம்பாளையம் அருகேயுள்ள கே.சி.பி குவாரி ஆபீஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். இந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ், நேற்று சோதனையின்போது நெஞ்சுவலியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று எம்.ஆர்.வி., எஸ்.பி.வி., நாளை சி.வி.பி-யா ?! - திமுக அரசின் அடுத்த மூவ்?!
கே.சி.பி நிறுவனம்
கே.சி.பி நிறுவனம்

2012-13 நிதியாண்டில் ரூ.42.54 கோடி நிகர லாபத்தை எட்டிய கே.சி.பி நிறுவனம், 2018-19 நிதியாண்டில் ரூ.453.92 கோடி நிகர லாபத்தை எட்டியிருக்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறியிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், வேலுமணி சகோதரர் அன்பரசனும், சந்திரபிரகாஷும் கடந்த 2013-ம் ஆண்டே தொழில் நிமித்தமாக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இந்த நெட்வொர்க் சம்பந்தப்பட்ட பல சொத்துகள் சந்திரபிரகாஷ் கன்ட்ரோலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்திரபிரகாஷ்
சந்திரபிரகாஷ்

அதனால்தான் நேற்று சோதனையின்போது சந்திரபிரகாஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரிடம் பல ஆவணங்கள் சிக்கும் என்பதால், தொடர்ந்து சோதனை நடத்திவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு